(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்டத்துக்கான பட்டியல் எமக்கு எந்த வகையில் சவாலானதல்ல. காரணம் வெற்றி பெறும் ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து நாம் சபைகளை நிறுவுவோம். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவாலானதாக அமைந்தாலும் அந்த சவாலை நிச்சயம் வெற்றி கொள்வோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நாம் சாதாரணமாகக் கருதவில்லை. சவாலாகவே கருதுகின்றோம். எனவே கடந்த தேர்தல்களை விட எவ்வாறு இம்முறை தேர்தலில் வாக்குகளை அதிகரித்துக் கொள்வது என்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் கொழும்பில் வெற்றி பெற்றோம். எனினும் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தோம். எனவே தான் இந்த தேர்தல் எமக்கு சவாலானது என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். எனினும் தற்போது தேர்தல் நிறைவடைந்து 6 மாதங்கள் கடந்துள்ளன.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சவாலை எம்மால் வெற்றி கொள்ள முடியும் என்று நம்புகின்றோம். வைத்தியர் ருவைஸ் அனீபா தலைமையில் சிறந்த குழுவொன்றை கொழும்பில் களமிறக்கியிருக்கின்றோம்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய போது கொழும்பில் அதிகளவான வாக்குகளைப் பெற்றிருந்தார். பொதுத் தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர். எனவே இம்முறை தேர்தலில் அந்த வாக்குகளை எவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் ஈர்ப்பது என்பது குறித்து அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்டத்துக்கான பட்டியல் எமக்கு எந்த வகையில் சவாலானதல்ல. அவ்வாறன்றி ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவு செய்யப்பட்டால் அவர்கள் எம்முடன் இணைந்து செயற்படுவர். எனவே ஐ.தே.க. தனித்து களமிறங்குவதால் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை. தற்போது அரசாங்கத்துக்கு மக்கள் செல்வாக்கு குறைவடைந்து செல்கிறது. எனவே தான் அது முழுமையாக வீழ்ச்சியடைய முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM