(செ.சுபதர்ஷனி)
நாட்டின் சுகாதார சேவையில் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம் தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் சார்லஸ் கல்லனன் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் சார்லஸ் கல்லனன் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கிடையில் அண்மையில் சுகாதார அமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதாரத்துறை மேம்பாட்டுத் திட்டங்கள், எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து பகுப்பாய்வு செய்து, தேவைக்கேற்ப அந்தத் திட்டங்களை விரைவுபடுத்துதல், எதிர்காலத் திட்டங்களைத் தயாரிப்பது போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது மக்களின் அரசாங்கம் என்ற ரீதியில் அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டிய பணிப்பாளர் சார்லஸ் கல்லனன், இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பாக உள்ள, சுகாதார அமைச்சுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் தொடர்ந்து வழங்குவதாக அமைச்சரிடம் உறுதியளித்தார்.
நாட்டில் தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், எளிதில் அணுகக்கூடிய இடங்களில் 1,000 ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவும் முன்மொழியப்பட்ட திட்டத்துக்கும் பணிப்பாளர் சார்லஸ் கல்லனன் தனது பாராட்டை தெரிவித்திருந்தார்.
மேலும் புதிய தொழில்நுட்பம், அறிவு, தொழில்முறை திறன் மற்றும் உலகளாவிய சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கல் அவசியம் என்று சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் புதிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் தொடர்பிலும் கேட்டரிந்துக் கொண்டார்.
இதேவேளை சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட அமுலாக்க அலுவலகம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர், சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் குறுகிய காலத்தில் தரமான சேவைகளைப் பெற முடியும். நாட்டின் மருத்துவமனை அமைப்பின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு உயர்தர மருந்துகளைத் தொடர்ந்து வழங்குவதே சுகாதார அமைச்சின் முதன்மையான நோக்கமாகும்.
இந்தப் பணியை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. ஆகையால் நாட்டிற்குத் தேவையான மருந்துகளை அரச மற்றும் தனியார் துறைகளின் மூலம் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM