இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு ; 22 பேர் பலி!

23 Mar, 2025 | 05:31 PM
image

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு,  22 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டு இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பின்வருமாறு,

ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

ஜனவரி 4 - மாத்தறை, வெலிகம பொலிஸ் பிரிவின் கப்பரத்தொட்ட வள்ளிவெல பகுதியில் நடந்து சென்ற 05 பேரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சம்பவத்தில் 26 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

ஜனவரி 7 - கல்கிஸ்ஸையின் வட்டாரப்பல  வீதி பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

அதேபகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 20 வயதுடையவர்கள் உயிரிழந்தனர்.

ஜனவரி 09 - அஹுங்கல்ல பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, அதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் “லொக்கு பெட்டி” என்ற பாதாள கும்பல் உறுப்பினரின் உறவினர் என்று பொலிஸார்  பின்னர் தெரிவித்தனர்.

ஜனவரி 13 - தெவிநுவர, தல்பாவிலவில் உள்ள உலர் மீன் வியாபாரி ஒருவரின் வீட்டின் முன், அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

உலர் மீன் வாங்க விரும்புவதாகக் கூறி வீட்டின் வாயிலைத் திறந்தபோது துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், வர்த்தகர் துப்பாக்கிச் சூட்டில் உயிர்தப்பினார்.

ஜனவரி 15 - தொடங்கொடை, வில்பாதவில் உள்ள வீட்டொன்றின் மீது துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார்  தெரிவித்தனர்.

ஜனவரி 16 - மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று  இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அதேநாளில், கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கார் உதிரி பாகங்கள் கடையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜனவரி 19 - கல்கிஸ்ஸையின் சிரிபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள்  24 மற்றும்  36 வயதுடையவர்கள் ஆவர்.

துப்பாக்கிச் சூடு நடந்த சுமார் 15 நிமிடங்களுக்குள், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்  ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், சுமார்  1.5 மில்லியன் ஒப்பந்த விலைக்கு கொலையைச் செய்ததாகவும், ஆரம்பத்தில் அவருக்கு  2 இலட்சம் வழங்கப்பட்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

ஜனவரி 22 - அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் காரில் வந்த  குழுவினர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜனவரி 31 - காலி, ஹினிதும, பனங்கல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தியதுடன் இதில் மூன்று பேர் கொலைசெய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் உள்ள  விடுதி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதன் உரிமையாளர் உட்பட மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

பெப்ரவரி 07 - மினுவங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்  35 வயதுடையவர் ஆவார்.

பெப்ரவரி 10 - கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், காயமடைந்த நபர் வைத்தியாசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 43 வயதுடையவர் ஆவார்.

“பழனி ஷிரான் குளோரியன்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி குழு இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் போதைப்பொருள் கடத்தல்காரர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் அல்லது "புகுடுகன்னா"வின் நெருங்கிய கூட்டாளி என பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்ரவரி 19 - மித்தேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு நபர், மகள் மற்றும் மகன் கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர் 'கஜ்ஜா' என அடையாளம் காணப்பட்டார், மேலும் அவரது 6 வயது மகள் மற்றும் 9 வயது மகனும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், அதே நாளில், திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பூசா சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு வழக்குக்காக அழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த துப்பாக்கிச் சூடு ஒரு வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட ஒருவரால் நடத்தப்பட்டது, பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த துப்பாக்கிச் சூடு கெஹெல்பத்தர பத்மே என்பவரால் நடத்தப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

பெப்ரவரி  21 - ஜா எல, பமுனுகம, மோர்கன்வத்த கடற்கரையில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையில், அதே நாளில் கொட்டாஞ்சேனையில் உள்ள கல்பொத்த சந்திக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, அவர்கள் அதே நாளில் கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் இருவரும் பொலிஸாரை தாக்க முற்பட்டபோது பொலிஸார் மேற்கொண்ட  துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

பெப்ரவரி 26 - மினுவாங்கொடையில் உள்ள பத்தடுவன சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

நபர்களில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் காயமடைந்த நபர் கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் என்பதை பொலிஸார் தெரிவித்தனர்.

மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூடு

மார்ச் 08 - கம்பஹாவின் அகரவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரண்டு நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் சீடரான தம்மித சுமித் என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பின்னர் தெரியவந்தது.

மார்ச் 13 - காலி, அக்மீமன தலகல பகுதியில் பூசா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் சிறிதத் தம்மிக அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் அவரது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதற்கிடையில், அதே நாளில், வெலிவேரியவில் உள்ள அரலியகஸ்தேக சந்தியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர்.

காயமடைந்த நபர் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய உறவினர் என்பது பின்னர் தெரியவந்தது.

மார்ச் 14 - அம்பலங்கொடை பொலிஸ் பிரிவின் இடம்தொட்ட பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவர் 'பொடி சுத்தா' என்ற 39 வயதுடையவர்.

மார்ச் 17 - மிதிகமவின் பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அதற்கான நோக்கம் அல்லது சந்தேக நபர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அதே நாளில், கிராண்ட்பாஸில் உள்ள நாவலகம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த இருவரும் 22 மற்றும் 28 வயதுடையவர்கள்.

மார்ச் 21 - தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வேனில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள்  அதே பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால...

2025-04-24 12:57:35
news-image

வானில் நாளை அரிய காட்சி தென்படும்

2025-04-24 13:14:38
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-04-24 12:15:23
news-image

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு வாக்குகளால் மக்கள்...

2025-04-24 13:12:33
news-image

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை...

2025-04-24 12:39:48
news-image

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது

2025-04-24 12:39:32
news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03