ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? - ரவி கருணாநாயக்க கேள்வி

23 Mar, 2025 | 04:34 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையில் எவ்வித சிக்கலும் ஏற்படக் கூடாதெனில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனை எவ்வாறு கையாளப் போகின்றனர் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில்  ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆடை மற்றும் இறப்பர் உற்பத்திகள் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு சுமார் 3.5 பில்லியன் டொலருக்கான ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன. 

ஆனால் அங்கிருந்து 600 மில்லியன் டொலர் அளவிலேயே ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கமைய எமக்கு பாரிய இலாபம் காணப்படுகிறது.

இவ்வாறான ஏற்றுமதிகளைக் கொண்ட நாடுகள் தொடர்பிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரி கொள்கைகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளார். 

அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. மறுபுறம் இந்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு  செல்ல வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

2015 நல்லாட்சி அரசாங்கத்தில் 7 சதவீதமாகக் காணப்பட்ட தேசிய உற்பத்தி வருமானத்தை நாம் 15 சதவீதம் வரை அதிகரித்தோம். அந்த திட்டத்தை தற்போதைய அரசாங்கம் முன்கொண்டு செல்வது உண்மையில் மகிழ்ச்சிக்குரியது. 

கடன் மீள் செலுத்தல் மற்றும் ஏற்றுமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேவேளை வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும். இவ்வாறு பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான தலைமைத்துவத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

 பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஓய்வூதியத்தை நீக்குவதை விடுத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சிறப்பு சலுகைகளை நீக்குவதே பொறுத்தமானது.

எமது ஆட்சியில் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை மீண்டும் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதில் மீண்டும் எவ்வித சிக்கல்களும் ஏற்படக் கூடாது எனில், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. 

அதேவேளை இது தொடர்பில் ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை அரசாங்கம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுக்கே இலங்கையிலிருந்து அதிகளவில் ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன. 

எனவே இது தொடர்பில் வெற்றி கொண்ட சிறந்த சந்தர்ப்பத்தை எக்காரணத்துக்காகவும் இழந்து விடக் கூடாது. அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலைச் சீருடைகளும்...

2026-04-22 19:48:32
news-image

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள்...

2026-04-22 19:39:24
news-image

$2.5 மில்லியன் சென்றது யாருடைய கணக்கிற்கு?...

2026-04-22 19:37:40
news-image

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த இலங்கையை...

2026-04-22 17:54:46
news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23
news-image

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான...

2026-04-22 17:47:49
news-image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு...

2026-04-22 17:46:33