தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட நடவடிக்கை ; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க

23 Mar, 2025 | 04:06 PM
image

(நமது நிருபர்)

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வன்முறை சம்பவங்களைக் குறைப்பதற்கும் அதிகாரிகள் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயற்படுத்தி வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸாரின் தேர்தல் பிரிவு, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் நாடு தழுவிய வன்முறை நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அனைத்து சம்பவங்களும் பதிவு செய்யப்படுகின்றன. எந்தவொரு மீறல்களுக்கும் எதிராக நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்,

தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் போது சிறப்பு முன்னெச்சரிக்கைகள் செயற்படுத்தப்பட்டன.

தற்போது, வழக்கமான பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, தேர்தல் நாள் நெருங்கும்போது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கான பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளோம்.

கொழும்பில் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை மேற்பார்வையிடுவது உட்பட, தேர்தல் நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் பணியை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

தேர்தல் காலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்கு அளிக்கப்படும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களைக் குறைப்பதற்காக, பொலிஸாரின் சிறப்புப் படை மற்றும் முப்படை வீரர்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51