சிவனொளிபாதமலை யாத்திரைக்காக சென்றவர்களில் போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற சிலர் கைது செய்யப்பட்டதாக அட்டன் பிரதேச பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் ஹஷிஷ், கஞ்சா, கஞ்சா கலந்த மோதக மாத்திரைகள் மற்றும் புகையிலை கலந்த மாவா ஆகியவற்றை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலை யாத்திரையின் போது போதைப்பொருள் கொண்டு சென்றவர்களை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து, நல்லதண்ணி, மஸ்கெலியா, பொல்பிட்டிய, நோர்டன்பிரிட்ஜ், கினிகத்தேனை மற்றும் நோர்வூட் ஆகிய பொலிஸ் நிலைய பொலிஸாரின் உதவியுடன் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சந்தேக நபர்கள் 25 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அதிகமான ஒளி சாதனங்கள் பொருத்தப்பட்டு சிவனொளிபாதமலை யாத்திரியர்களை ஏற்றிச் சென்ற பல தனியார் பஸ்களையும் பொலிஸார் சோதனையிட்டனர்.
மேலும், இந்த பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக சாதனங்களை அகற்றி அப்புறப்படுத்துமாறு பஸ் சாரதிக்கு பொலிஸார் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM