ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிக முக்கிய தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார்- ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர்

Published By: Rajeeban

23 Mar, 2025 | 01:29 PM
image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான  கேஜிபிக்குள் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிகமுக்கியமான புலனாய்வு தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய  ஒலெக் கோர்வ்டிஸ்கி தனது 86 வயதில் காலமானார்.

1985 இல் ரஸ்யாவிலிருந் தப்பிவந்து பிரிட்டனில் வாழ்ந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ள அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பனிப்போர் யுத்த காலத்தின் மிக முக்கியமான உளவாளிகளில் ஒருவர் இவர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

1980களில் சோவித் யூனியனிற்கும் மேற்குலகிற்கும் இடையில் அணுவாயுத போர் வெடிக்கும் ஆபத்தான நிலையை தணித்தவர் இவரே.

மொஸ்கோவில் 1938 இல் பிறந்த ஒலெக் கோர்வ்டிஸ்கி சோவியத் யூனியனின் கேஜபியில் 1960களில் இணைந்து கொண்ட பின்னர் லண்டன் கொப்பன்ஹேகன் உட்பட பல நாடுகளில் பணியாற்றினார்.லண்டனிற்கான கேஜிபியின்  தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.

1968 இல் பிராக்கின் சுதந்திர இயக்கத்தை சோவியத்யூனியனின் டாங்கிகள் நசுக்கி அழித்தது குறித்து சோவியத்தின் பல உளவாளிகள் அதிருப்தியடைந்தனர், இவர்களை பிரிட்டன் 1970களில் தனது எம்16 புலனாய்வு பிரிவிற்குள் உள்வாங்கியது.

1990 இல்  ஒலெக் கோர்வ்டிஸ்கியும்,பிரிட்டனின் புலனாய்வு   வரலாற்றிசிரியர் கிறிஸ்டொபெர் அன்ரூவும் இணைந்து எழுதிய கேஜிபி ஒரு உள்கதை  என்ற புத்தகம் பல விபரங்களை வெளிப்படுத்தியது.''

ஒரு கம்யுனிஸ்ட் கட்சி அரசாங்கம்,தவிர்க்க முடியாமல் சகிப்புத்தன்மை,மனிதாபிமானமற்ற தன்மை போன்றவற்றை உருவாக்குகின்றது,சுதந்திரங்களை அழிப்பதற்கு வழிவகுக்கின்றது என கோர்வ்டிஸ்கி கருதினார் என அன்ரூ தெரிவித்திருந்தார்.

பனிப்போரின் மிகவும் அச்சமூட்டும் காலப்பகுதிகளில் ஒலெக் கோர்வ்டிஸ்கி பிரிட்டனிற்காக பணிபுரிந்தார்.

1983ம் ஆண்டு அமெரிக்கா பிரிட்டனின் அணுவாயுத தாக்குதல் குறித்து சோவியத்யூனியனின் அரசியல்தலைமை மிகுந்தஅச்சம் கொண்டுள்ளது ,முன்கூட்டியே தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடுகின்றது என கோர்வ்டிஸ்கி எச்சரித்தார்.

அவ்வேளை ஜேர்மனியில் இடம்பெற்ற நேட்டோவின் ஒத்திகையால் பதற்றநிலை உருவானது.

எனினும் அது ஒரு அணுவாயுத தாக்குதலிற்கான  ஒத்திகையல்ல என மொஸ்கோவி;ன் அரசியல் தலைமைகளிற்கு தெளிவுபடுத்திய கோர்வ்டிஸ்கி பதற்ற நிலையை தணித்தார்.

அதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சோவியத்யூனியனுடனான அணுவாயு பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

1985 இல் கோர்வ்டிஸ்கியை மொஸ்கோ பிரிட்டனில் இருந்து கலந்தாலோசனைகளிற்காக அழைத்தது, தான் இரட்டை முகவர் என்பது தெரிந்துவிட்டது என்பதை அறிந்த அவர் அச்சத்துடன் ரஸயா சென்றார்.

அவர் விசாரிக்கப்பட்டார் ஆனால்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.

இதன் பின்னர் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் அவரை பிரிட்டன் ரஸ்யாவிலிருந்து மீட்டுக்கொண்டுவந்தது.

கெடுபிடி யுத்த காலத்தில் சோவியத்யூனியனில் இருந்து பிரிட்டனிற்கு தப்பிச்சென்ற சிரேஸ்ட உளவாளி  இவர்.

பிரிட்டன் கோர்வ்டிஸ்கியை மிகவும் பெறுமதியானவராக கருதியது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அவருடன் இணைவதற்கு அனுமதித்தால், அவர் அம்பலப்படுத்திய கேஜிபி உளவாளிகளை  பிரிட்டன் நாடு கடத்தாது என மார்க்கிரட் தட்ச்சர் அறிவித்தார்.

எனினும் ரஸ்யா இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தது,

இதன் காரணமாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரின் அதிருப்தியையும் மீறி பிரதமர் மார்க்கிரட் தட்;ச்சர் 25 கேஜிபி உளவாளிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தியது.

மொஸ்கோ பதிலுக்கு 25 பிரிட்டிஸ் பிரஜைகளை நாடு கடத்தியது - இரண்டு நாடுளும் தொடர்ந்தும் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன ஆனால் உறவுகள் பாதிக்கப்படவில்லை.

ஆறுவருடங்கள் கோர்வ்டிஸ்கியின் குடும்பத்தை 24 மணிநேர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்த கேஜிபி 1991 இல் அவர்கள் அவருடன் இணைய அனுமதித்தது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 13:40:29
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31