மன்னார்- பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் சனிக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் லொறியை செலுத்திச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்தலொறியில் 4 நபர்கள் பயணித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த லொறியின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு சகோதரர்களில் ஒருவர் வீடு திரும்பியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு கிராமங்களில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற போதும் பொலிஸார் அசமந்த போக்குடன் செயல்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM