கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நாடாளுமன்ற தேர்தலிலே அற்ப சலுகைகளிற்காக , இந்த இனவாத அரசாங்கத்திற்கு ,ஆதரவு வழங்கிய தமிழ் புத்திஜீவிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள்.
-----------
அனுர ஒரு புறத்திலே தான் இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என சொல்லிக்கொண்டு,இங்கேமேலும் மேலும் இந்த பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
காணி உரிமையாளர்களும் இவ்வாறான தகவல் கிடைத்ததன் பேரில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று இங்கே இராணுவத்தினரின்வாகனங்கள் அதிகளவில் வந்து ஏற்றி இறக்குகின்ற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன, இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றநிலையிலே,இரண்டு நாட்களிற்கு முன்னர் கூட கொழும்பிலே காணி உரிமையாளர்களை அமைச்சர் சந்தித்து இது உங்களுடைய காணிகள் என சொன்னால் விடுவிப்போம் என ஒரு புறத்தில் கூறிக்கொண்டு,மறு புறத்திலே அதே அரச இயந்திரம்,இந்த சட்டவிரோத விகாரைக்குள் அமைக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்காக தங்களின் அரச வளங்களை பயன்படுத்திக்கொண்டிருப்பது என்பது, அனுர அரசின் இரட்டை முகத்தை காட்டுகின்றது.
அனுர ஒரு புறத்திலே தான் இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என சொல்லிக்கொண்டு,இங்கேமேலும் மேலும் இந்த பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்,. அவருடைய தலைமையிலே முன்னெடுக்கின்றனர் , பாதுகாப்பு அமைச்சரும் அவர்தான் , பௌத்த விவகார அமைச்சரும் அவர்தான்.
எங்கள் மக்கள் இதனை புரிந்துகொள்ளவேண்டும்,கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நாடாளுமன்ற தேர்தலிலே அற்ப சலுகைகளிற்காக , இந்த இனவாத அரசாங்கத்திற்கு ,ஆதரவு வழங்கிய தமிழ் புத்திஜீவிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள்.
இதனுடைய விளைவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு வந்து முடியும் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.
இந்த திறப்பு விழா நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்பது போராட்டக்காராகளின் காணி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது எந்த வகையிலும் இது நியாயப்படுத்த முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத,ஆக்கிரமிப்பு நடவடிக்கை.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்குடாநாட்டில் உள்ள மக்கள் பெருமளவிலே திரண்டு வரவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM