தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்யுள்ளமையால் அந்நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி தெற்கு தென் கொரியாவில் தெற்கு சான்சியோங் கவுண்டி உள்ளிட்ட மூன்று வெவ்வேறு பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்த தீவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு வரை 25 சதவீதம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொரிய வனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 847 ஹெக்டயர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. சான்சியோங்கில் வசிக்கும் சுமார் 260 பேர் வெளியேறியுள்ளனர். இதேவேளை, தென்கிழக்கு நகரமான உல்சானிலும் அருகிலுள்ள கியோங்சாங் மாகாணத்திலும் சுமார் 620 குடியிருப்பாளர்கள் சனிக்கிழமை வெளியேறியுள்ளதாக தென்கொரிய உள்நாட்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தென் கொரியா தெற்குப் பகுதிகளில் அனர்த்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, சான்சியோங் பகுதி விசேட அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM