இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தமிழக மீனவர்கள் 5 பேர் இன்று காலை  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

யாழ். நெடுந்தீவு மேற்கு திசை கடற்பரப்பில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் கைது சம்பவத்தால் இராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.