பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 76 பேர் கைது

23 Mar, 2025 | 01:28 PM
image

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட  இளம் யுவதிகள் உட்பட 76 பேர் நேற்று சனிக்கிழமை (22) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிடிகொட பெல்லனவத்த பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் களியாட்ட நிகழ்வு நேற்றையதினம் இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பில் 15 இளம் யுவதிக உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ், கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் மற்றும்  சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த 03 பெண்களும் 14 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு,  இந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 12 இளம் பெண்கள் மற்றும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51