காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன அறிக்கை அல்ல - நிசாம் காரியப்பர் 

Published By: Vishnu

22 Mar, 2025 | 10:04 PM
image

உக்கிரம் அடைந்து வரும் காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடகச் செய்தி அரசாங்கத்தின் கண்டன அறிக்கை அல்ல என்றும், மூன்றே மூன்று வரிகளைக் கொண்ட அந்த செய்தியில் இஸ்ரேலின் அடாவடித்தனத்தையோ, அதற்கான அமெரிக்காவின் ஆதரவையோ கண்டிக்கும் ஒரு சொல்  கூட  இல்லாதது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்  தெரிவித்துள்ளார்.

 குறித்த விடயம் சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

புனித ரமழான் மாதத்தில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பலஸ்தீன முஸ்லிம்கள் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும் நிலையில்,  காஸா மீது பாரிய தாக்குதல்களை நடத்தி ,அங்கு இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலின் ஈனச் செயலை பல்வேறு உலக நாடுகளும் கண்டித்தும்,அந் நாட்டுக்கு எதிராக சில இராஜதந்திர நடவடிக்கைகளையெடுத்தும் இருக்கின்றன.

இந்த மனிதாபிமான விடயத்தில் இலங்கை அரசாங்கம் இதுவரை எந்த விதமான ஆக்கபூர்வமான முன்னெடுப்பையும் மேற்கொள்ளாமல்  தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதைச் சுட்டிக்காட்டி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆதாரபூர்வமான  அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, அது பற்றி பாராளுமன்றத்திலும்  உரையாற்றி இருந்தார் .நானும் அதைப்பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தேன்.

இந்தப் பின்னணியில், வெறுமனே  அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெள்ளிக்கிழமை (21) யாரும் கையொப்பம் இடாத ஓர் உப்புச்சப்பற்ற ஊடகச் செய்தியை மட்டும் வெளியிட்டு, இந்நாட்டு முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்கு எத்தனித்துள்ளதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். அரசாங்கம், இவ்வாறான உணர்வுபூர்வமான விடயங்களில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வது அவசியமாகும் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00
news-image

சந்தேகத்தின் கைதுசெய்ய நபரை ஈவிரக்கமின்றி தாக்கிய...

2025-04-29 17:27:56