தமிழின் நட்சத்திர நடிகையான வரலட்சுமி சரத்குமார் கதை நாயகிகளுள் ஒருவராக நடித்திருக்கும் ' தி வெர்டிக்ட் 'எனும் திரைப்படம் பட மாளிகையில் விரைவில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள' தி வெர்டிக்ட் 'எனும் படத்தில் சுகாசினி மணிரத்னம் , வரலட்சுமி சரத்குமார் , வித்யூலேகா ராமன் , ஸ்ருதி ஹரிஹரன், பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதித்யா ராவ் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். மிஸ்ட்ரி திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை அக்னி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதால்.. விரைவில் படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்படும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர் மேலும் இது தொடர்பாக 'சுப்ரீம் ஸ்டார் ' சரத்குமார் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அத்துடன் படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் அதாவது டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM