செல்வத்தை வாரி வழங்கும் பைரவர் வழிபாடு..!?

Published By: Digital Desk 2

22 Mar, 2025 | 04:55 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் பணம் அல்லது ரூபாயின் தேவை என்பது நாளாந்தம் மாறுபடுகிறது. ஒரு நாள் ஆயிரம் ரூபாயாக இருக்கும் பண தேவை என்பது சில நாட்களில் தொடர்ச்சியாக பல ஆயிர ரூபாய்கள் தேவைப்படுவதாக மாறும். இப்படி சீரற்ற தன்மையில் தான் எம்முடைய பண தேவைகள் இருக்கிறது. இந்நிலையில் நாளாந்தம் நம்முடைய தேவைக்கேற்ப பணத்தை-  செல்வ வளத்தை வாரி வழங்குவதில்  பைரவருக்கு விசேட ஆற்றல் உள்ளதாகவும், இதற்காக பிரத்யேக மஹா பைரவ வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆன்மீக முன்னோர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : இலுப்பை எண்ணெய், சந்தன வாசம் மணக்கும் ஊதுபத்தி

தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு இலுப்பை எண்ணெயால் விளக்கேற்ற வேண்டும். அத்துடன் செவ்வரளி பூவை சாற்றி, சந்தன வாசம் வீசும் ஊதுபத்தியை ஏற்றி வணங்க வேண்டும். இந்த தருணத்தில் 'ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!' எனும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இத்தகைய பிரத்யேக வழிபாட்டினை முழு நம்பிக்கையுடன் மேற்கொண்டால் செல்வ வளம் உயர்வது உறுதி.

தேய்பிறை அஷ்டமி திதி மட்டுமல்லாமல் நாளாந்தம் பைரவரை மேற்கூறிய முறைப்படி வழிபட்டால் செல்வ வளம் அதிகரிப்பதும் உறுதி. ஆனால் இத்தகை வழிபாட்டை தேய்பிறை அஷ்டமி திதியன்று தொடங்குவது தான் பலனை தரும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்