அதர்வா நடிக்கும் ' இதயம் முரளி' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

Published By: Digital Desk 2

22 Mar, 2025 | 04:55 PM
image

தமிழின் பிரபல நடிகரான அதர்வா காதல் நாயகனாக வசீகரிக்கும் தோற்றத்துடன் திரையில் தோன்றும் 'இதயம் முரளி 'எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' இதயா ' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் ' இதயம் முரளி ' எனும் திரைப்படத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் , நட்டி நட்ராஜ் , எஸ். தமன் , நிஹாரிகா , ரக்சன், ஏஞ்சலின், பிராக்யா , சுதாகர் , யஷா ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சி. ஹெச் .சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ' இதயா நீ காதல் விதையா உன் மனம் எழுதிடும் கதை கதையா..' எனத் தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத , பின்னணி பாடகர் விஷால் மிஸ்ரா பாடியிருக்கிறார்.

மெல்லிசையும் காதல் உணர்வும் பின்னிப் பிணைந்திருக்கும் இந்த பாடல் -இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் முழு நீள பாடலாக இல்லாமல் துண்டு பாடலாக அமைந்திருப்பது  ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right