டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த எம்புரான் திரைப்படம்

22 Mar, 2025 | 04:36 PM
image

மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லூசிபர். தற்போது இப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியிருக்கிறது. 

இப் படத்துக்கு எல் 2 எம்புரான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப் படத்தில் மோகன்லால், ப்ரித்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தோமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளதோடு படத்துக்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.  இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் கேம் ஒஃப் த்ரோன் படத்தில் நடித்த உலகப் புகழ்பெற்ற ஜெரோம் பிளின் நடித்துள்ளார்.

இதன் முன்பதிவுகள் வெள்ளிக்கிழமை (21) தொடங்கிய நிலையில் ஆரம்பமான ஒரு மணிநேரத்துக்குள் 96 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதுவரையில் திரைப்படங்களின் முன்பதிவுகளின் எண்ணிக்கையை இப் படம் முறியடித்துள்ளது. 24 மணித்தியாலத்துக்குள் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையை இப் படம் பெற்றுள்ளதோடு, வெள்ளிக்கிழமை (21) மட்டும் சுமார் 6 இலட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right