நம் முன்னோர்கள் பெண்ணின் கண்களை ஏன் குவளை மலர்களுக்கு ஒப்பிடுகின்றனர் என்று தெரியுமா ? குவளை மலர்கள் என்றும் குளத்து நீருடன் வாழக்கூடியவை. என்றோ ஒருநாள் குளத்து நீர் வற்றி விட்டால் இந்த குவளை மலர்கள் அழகற்று காட்சியளிக்கும்.
அதே போல் தான் நம் கண்களும், ஒருவரின் கண்களில் இருக்கின்ற உள் நீர் வற்றிவிட்டால், அவரின் முகம் தோண்டி எடுக்கப்பட்ட நுங்குபோல் காட்சியளிக்குமாம். ஆகவே நம் அனைவருக்கும் கண்கள் அழகாக இருந்தால் முகம் அழகாக தெரியும்.
பொதுவாக பெண்கள் அனைவரும் கண்களை அழகாக வைத்திருக்க வேண்டும் என எண்ணுவது வழக்கம். அதிலும் கண்ணின் இமைகள் மெல்லியதாக இல்லாமல் அடர்த்தியாக இருந்தால் அழகாக இருக்கும் என்றும் எண்ணுவோம். இதற்கு நம்மில் பெரும்பாலானவர்கள் மஸ்காரா, ஐ லைனர் அல்லது ஐ ஷேடோவை பயன்படுத்து உண்டு.
மஸ்காரா, ஐ லைனர், ஐ ஷேடோ போன்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாமல் கண் இமைகளை இயற்கையாகவே அடர்த்தியாக வைத்திருக்க சில விடயங்களை செய்யலாம்.
1. மஸ்காரா, ஐ லைனர், ஐ ஷேடோ போன்ற அழகு சாதன பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
2. இரவு தூங்கச் செல்லும் முன் ஐ மேக்கப்பை முழுமையாக நீக்கிய பிறகு தூங்கச் செல்லவும்.
3. குளிக்கும்போது விரல்களால் புருவத்தையும், கண் இமைகளையும் மென்மையாக சுரண்டி விட்டு மசாஜ் செய்து பின் சவர்க்காரம்யிட்டு தேய்த்து குளிப்பது மெல்லிய புருவங்களையும் இமைகளையும் அடர்த்தியாக்க உதவும்.
4. கிரீன் டீயில் ஊறவைத்த பஞ்சினை போன்று படியக்கூடிய அந்த பகுதியை கண் இமைகளில் மசாஜ் செய்யதால் கண் இமை நன்கு ஆரோக்கியமாக வளரும்.
5. சிறிதளவு முட்டையின் வெள்ளைக்கருவுடன் பாதாம் எண்ணெயை கலந்து கண் இமைகளில் தடவி வர கண் இமைகள் உதிர்வது தடுக்கப்படுவதுடன் நன்கு வளரவும் செய்யும்.
6. ஒலிவ் எண்ணெயை உறங்கச் செல்வதற்கு முன் கண் இமைகளில் சிறிதளவு தொட்டு தடவி வந்தால் கண் இமைகள் நன்கு வளரும்.
7. கண் இமைகளின் மேல் தோலில் சுருக்கமும் கருமையும் ஏற்படாமல் தடுக்க ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM