சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் தியாகராஜர் ஆராதனை விழா 

Published By: Digital Desk 2

22 Mar, 2025 | 01:03 PM
image

( டானியல் மாக்ரட் மேரி )

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஏற்பாட்டில் வீரகேசரியின் ஊடக அனுசரணையில் தியாகராஜர் ஆராதனை விழா வெள்ளிக்கிழமை (21)  பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் விழாவில், பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துக்கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக வீரகேசரியின் நிர்வாக இயக்குநர் குமார் நடேசன், இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை மற்றும் பிரமுகர்கள், பல்துறை இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வானது மங்கல விளக்கேற்றுதலுடன் ஆரம்பமாகியது.

இவ் விழாவில் கலந்து கொண்ட  இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில், 

இந்திய பாரம்பரிய இசையின் ஒரு வடிவமான கர்நாடக இசையின் மேதையாக இசையமைப்பாளர் தியாகராஜர் சிறந்து விளங்குகிறார். இவர் நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றியுள்ள பெருமைக்குரியவர் ஆவார். தியாகராஜர் ஆராதனை வருடாந்தம் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இவ் விழாவானது, இந்திய கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. இந்த ஆராதனை நிகழ்வில்,  இலங்கையின் பல்வேறு பகுதிகள் மற்றும் இந்தியாவில் இருந்தும் இந்த  நிகழ்வில் மெல்லிசை மற்றும் பக்தி பாடல்களை வழங்குவதற்காக வருகை தந்துள்ளனர்.

தியாகராஜர் ஆராதனை ஆன்மீக மற்றும் கலாச்சார அடையாளத்தை கொண்டது. கர்நாடக இசையானது, காலத்தினால் அழியாததும் தலைமுறைகளால் பாதுகாக்கப்பட்டதுமாகும். தியாகராஜர் ஆராதனை நிகழ்வுகளை எதிர்காலங்களிலும் ஊக்குவிக்க வேண்டும் என அவர் தனது உரையில் தெரிவித்தார்.

இவ் விழாவில் ஆறு குழுக்கள் இணைந்து  தியாகராஜர் மரபின் உணர்வோடு எதிரொலிக்கும் பாடல்களை பாடியது.

இந் நிகழ்வானது பஞ்ச ரத்ன கீர்த்தனைகளுடன் ஆரம்பமானது.

கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் , "எந்தமுத்து" என்ற கீர்த்தனையை பிந்துமாலினி ராகம் மற்றும் ஆதி தாளத்தில் பாடி சபையோரின் செவிகளுக்கு விருந்தளித்தது. 

அடுத்ததாக, சுவாமி விபுலானந்தா அழகியல் ஆய்வு நிறுவன கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,மிருதங்கம்  மற்றும் புல்லாங்குழல் இசைக்கருவிகளுடன் "நன்னுவிடாச்சி "என்ற கீர்த்தனையை ரீதிகௌளை இராகத்தில் பாடினர்.

  இதனையடுத்து, யாழ்ப்பாண சாரங்க இசை மன்ற மாணவர்கள், வயலின் மற்றும் மிருதங்கம் இசைக்கருவிகளுடன், "சத்தலனி தினமு" என்ற கீர்த்தனை மாலையை நாகாநந்தினி ராகத்தில் பாடி சபையோரின் கவனத்தை ஈர்த்தனர்.

தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள டி.கே. சகோதரிகள் குழுவினர், "பரமார்த்தமிதே" என்ற கீர்த்தனையை கீரவாணி ராகத்தில் இசை நயத்துடன் பாடி சபையோரை மகிழ்வித்தனர்.

இறுதியாக,  இசை அர்ச்சனை அக்கடமி மற்றும் கொழும்பு காட்சி மற்றும் கலைபீட மாணவர்கள் "பண்டுரீதி" ,  "நன்னுகல்ல தள்ளி" என்ற கீர்த்தனைகளை பாடி இவ் விழாவினை நிறைவு செய்தனர்.

இந் நிகழ்வில், வீணை, மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் போன்ற இசை கருவிகளை பயன்படுத்தி, நிகழ்வின் இறுதிவரை சபையோரின் கவனத்தை இசைக் குழுவினர் ஈர்த்தமை சிறப்பம்சமாகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39
news-image

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து...

2025-04-16 07:03:22