நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது சுபோசாவா ; சபையில் தர்க்கம்

Published By: Vishnu

22 Mar, 2025 | 04:34 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சதொச  விற்பனை நிலையம்  ஊடாக  வழங்கப்படும்  நிவாரண பொதியில்  உள்ளடக்கப்படுவது சமபோசாவா, அல்லது சுபோசாவா என்பது தொடர்பில்  வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும், எதிர்க்கட்சியின் உறுப்பினர்  டி.வி. சானக்கவுக்கும் இடையில் கடும் தர்க்கம் நிலவியது.

நிவாரண பொதியில்  சுபோசா உள்ளடக்கப்படும் என்று குறிப்பிட்டதாக  என்று அமைச்சர் குறிப்பிட்ட நிலையில்,  சமபோசா உள்ளடக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டதாக டி.சி. சானக குறிப்பிட்டார். அமைச்சர்  வசந்த சமரசிங்க  சமபோசா உள்ளடக்கப்படும் என்று குறிப்பிட்ட காணொளியை டி. வி. சானக சபையில் ஒளிப்பரப்பு செய்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற அமர்வில்   விசேட  கூற்றை முன்வைத்து உரையாற்றிய அமைச்சர் வசந்த  சமரசிங்க,

சதொச விற்பனை நிலையம் ஊடாக  வழங்கப்படவுள்ள நிவாரண பொதி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள  போலியான  செய்தியை ஆளும் தரப்பின் உறுப்பினர் சபையில் குறிப்பிட்டார்.

வர்த்தகத்துறை அமைச்சு   மீதான குழுநிலை விவாதத்தின் போது நிவாரண உணவு பொதி தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்  நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கையில் அந்த பொதியின் உள்ளடக்கப்படும் பொருட்களை   பட்டியலிட்டேன். அரச  நிறுவனத்தால் உற்பத்தி  செய்யப்படும்   சுபோச பெக்கட்டுக்களை  வழங்குவதாகவே  குறிப்பிட்டேன். எதிர்க்கட்சிகள் சுபோசவை   ' சமபோசா'  என்று  மாற்றிக் கொள்கிறார்கள்.

விலைமனுகோரல் ஊடாகவே   பொருள்  விநியோக   நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும். இந்த  நிவாரண பொதியில் 200 கிராம் சுபோச    பெக்கட்டுக்கள் இரண்டு உள்ளடக்கப்படும்.  சமூக ஊடகங்களில்   வெளியாகும் பொய்யை   சபையில்  குறிப்பிடுவது கீழ்த்தரமானது. அனைத்து பொருட்களும் அரச நிறுவனங்களிடமே கொள்வன வு  செய்யப்படும். என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய  டி.வி. சானக,    அமைச்சரே,   நான் தான் சுபோசா தொடர்பில் குறிப்பிட்டேன். நீங்கள் அன்று   சபையில் உரையாற்றும் போது நான் சபையி இருந்தேன். நீங்கள்  ' சமபோசா' என்றே    குறிப்பிட்டீர்கள். என்னிடம்  காணொளி உள்ளது.  என்று குறிப்பிட்டு '  கடந்த  அமைச்சர் வசந்த சமரசிங்க ஆற்றிய உரையின்   காணொளியை  காண்பித்தார். அதில் அமைச்சர் சமபோசா  2  பெக்கட்' என்றே குறிப்பிடுகிறார் .'

தொடர்ந்து உரையாற்றிய  டி.வி. சானக, நான் ஹன்சாட் பதிவை கேட்டேன்.இன்றும்  இந்த விடயம்  அச்சிடவில்லையாம். கிடைத்தவுடன்  பார்த்துக்கொள்ளலாம். மனதில்  சுபோசாவை வைத்துக் கொண்டு, வாயில் சமபோசா என்று குறிப்பிட்டாரா  ? என்று  தெரியவில்லை.

மீண்டும் எழுந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த   சமரசிங்க,  அன்று  நான் குறிப்பிட்ட  விடயங்களை மீண்டும்   குறிப்பிடுகிறேன்.  இந்த நிவாரண பொதியில் 5 கிலோகிராம் நாடு அரிசி,பெரிய வெங்காயம்  2 கிலோகிராம், உருளைக்கிழங்கு 2 கிலோகிராம்,பருப்பு ஒரு கிலோகிராம், டின் மீன் ஒன்று, சிவப்பு சீனி 3 கிலோகிராம், கோதுமை மா 2 கிலோகிராம் சுபோசா  2 பெக்கட், 4 சோயா மீட் பெக்கட் உள்ளடக்கப்படும் என்றே  குறிப்பிட்டேன்.

இவர்கள் சமபோசா, சுபோசா என்ற  சொல்லை பிடித்துக்கொள்கிறார்கள். குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொள்கிறார்கள். நான்  சுபோசா என்றே குறிப்பிட்டேன் என்றார்.

இதனைத்  தொடர்ந்து   எழுந்து  உரையாற்றிய   பொதுமக்கள்  பாதுகாப்பு  பிரதி அமைச்சர்  சுனில்   வட்டகல   எதிர்க்கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேக  நான் குறிப்பிடாத விடயத்தை குறிப்பிட்தாக சபையில்  இன்று  காலை குறிப்பிட்டார். அந்த காணொளியை  சபைக்கு சமர்ப்பிப்பதாக  குறிப்பிட்டார் ஆனால் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை. தமது  கீழ்த்தரமான அரசியலுக்காக  பாராளுமன்றத்தை இவர்கள்  பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.

வர்த்தகத்துறை மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதம் கடந்த புதன்கிழமை (19) இடம்பெற்றது.இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின்   பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,  5000 ரூபா பெறுமதியான உணவு பொதி, 2500 ரூபாவுக்கு வழங்கப்படுவதாகவும்,  அந்த  நிவாரண பொதியில் 5 கிலோகிராம் நாடு அரிசி, பெரிய வெங்காயம்  2 கிலோகிராம்,உருளைக்கிழங்கு 2 கிலோகிராம், பருப்பு ஒரு கிலோகிராம்,டின் மீன் ஒன்று,சிவப்பு சீனி 3 கிலோகிராம், கோதுமை மா 2 கிலோகிராம்,சமபோசா 2 பெக்கட்,4 சோயா மீட் பெக்கட் உள்ளடக்கப்படும் என்று குறிப்பிட்டார். ஊடகங்களும் தமது செய்தியில்   சமபோசா  என்றே அறிக்கையிட்டிருந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52
news-image

இன்றைய வானிலை

2025-04-26 06:12:09
news-image

ஊழல், படுகொலை, ஆள் கடத்தல்களில் ஈடுபட்டோர்,...

2025-04-26 01:34:46
news-image

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொலிசார் கோரிய...

2025-04-26 01:21:08