யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் வியாழக்கிழமை (20) நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார்.
இதன்போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த சந்தேகநபரை கைது செய்தனர்.
இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை நீதிமன்ற குற்றப்பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதுடன் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM