(நெவில் அன்தனி)
சீனாவின் நஞ்சிங் உள்ளக விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமான 21ஆவது உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் சமோத் யோதசிங்க, இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்டார்.
வெள்ளிக்கிழமை (21) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 60 மீற்றர் தகுதிகாண் சுற்றின் இரண்டாவது போட்டியில் பங்குபற்றிய சமோத் யோதசிங்க, அப் போட்டியை 6.70 செக்கன்களில் ஓடிமுடித்து 3ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
எவ்வாறாயினும் எட்டு தகுதிகாண் சுற்றுகள் முடிவில் அரை இறுதிக்கு தகுதிபெற்ற 24 வீரர்களில் சமோத் யோதசிங்க கடைசி இடத்தையே பெற்றிருந்தார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை (21) மாலை நடைபெற்ற அரை இறுதிகளின் இரண்டாவது போட்டியில் பங்குபற்றிய சமோத் யோதசிங்க மீண்டும் 6.70 செக்கன்களில் 60 மீற்றர் தூரத்தை ஓடி முடித்து 8ஆவது (கடைசி) இடத்தைப் பெற்றார். இதன் காரணமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அவர் இழந்தார்.
அரை இறுதிகளில் பங்குபற்றிய 24 வீரர்களில் சமோத் யோதசிங்க 22ஆவது இடத்தைப் பெற்றார்.
கவீஷ பண்டார போட்டியிடுகிறார்
இலங்கையின் மற்றொரு வீரரான நதுன் கவீஷ பண்டார, இலங்கை நேரப்படி சனிக்கிழமை (22) காலை 7.55 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆண்களுக்கான 60 மீற்றர் சட்டவேலி ஓட்டத்திற்கான தகுதிகாண் சுற்றின் நான்காவது போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டம், பெண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டம் ஆகியவற்றுக்கான இறுதிப் போட்டிகளில் இலங்கை நேரடியாக பங்குபற்றவுள்ளது. இப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு கடைசி இரண்டு நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM