இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி; இந்திய அரசுடன் இணைந்து சாம்பூரில் மின்நிலையம் அமைக்க தீர்மானம் - ஜனாதிபதி

Published By: Vishnu

21 Mar, 2025 | 08:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தருவார் இதன்போது  சம்பூர் மின்நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளோம். மன்னாரில்  50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படும் காற்றாலை  திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்திய அரசாங்கத்துடன் கூட்டிணைந்து சாம்பூர் பகுதியில் மின்நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனத்துக்கும், மின்சார சபைக்கும் 50: 50 என்ற வகையில் உரிமத்தை கொண்டதாக கூட்டு  நிறுவனம் ஒன்று  ஸ்தாபிக்கப்படும். என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. அனைத்து சுமைகளையும் தோளில் சுமந்துக்கொண்டு செல்கிறோம். அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டள்ளது. ஆகவே அரச சேவையாளர்கள் வினைத்திறனான முறையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்வேன். ஓய்வுப்பெற்ற  ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகயை இரத்துச் செய்யும் சட்டமூலம் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும்.எவருடனும் எனக்கு  தனிப்பட்ட பகைமை கிடையாது.ஆகவே  நாட்டுக்காக எம்முடன் ஒன்றிணையுங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஒருசிலரின் உரையில் வேதனை மற்றும் அச்சம் வெளிப்பட்டுள்ளதை கண்டு நாங்கள் குழப்பமடையவில்லை. இவர்களின் வேதனை மற்றும் கோபத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது. சிறந்ததை ஏற்றுக் கொள்ளவும், விமர்சனங்களை புறக்கணிப்பதற்கும் தயாராகவுள்ளோம். நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் பயனுடையதான வகையில் பொருளாதாரத்தை செயற்படுத்துவோம்.

உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். இந்த ஆண்டு  4990 பில்லியன்  ரூபா அரச வருவாய் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில்,  கடன்களுக்கான வட்டி செலுத்தலுக்கு  2950 பில்லியன் ரூபாய்,  அரச சேவையாளர்களுக்கு சம்பள ஒதுக்கீடு 1352 பில்லியன் ரூபாய், ஓய்வுதிய கொடுப்பனவுக்கான ஒதுக்கீடு  4042 பில்லியன்  ரூபாய் என்ற அடிப்படையில் காணப்படுகிறது. மிகுதி  256 பில்லியன் ரூபாய் இதுவே தற்போதைய பொருளாதார நிலைமை. ஆகவே அவசரமடைய கூடிய நிலையில் பொருளாதாரம் இல்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

அரச நிறுவனங்களின் கடன் மற்றும் நட்டம்  ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளன. வருடாந்தம் இந்த நிலைமையே காணப்படுகிறது.  ஈட்டிக் கொள்ளும் வருமானத்தை காட்டிலும் செலவுகள் அதிகளவில் காணப்பட்டுள்ளது.  பொருளாதாரத்துக்கு  இயைவானதாக செயற்படும்  நிறுவனங்களுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.

பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் எம்மிடம் பல கேள்விகள் காணப்பட்டன.  ஆட்சி பொறுப்பினை ஏற்கும் போதே நாணய நிதியத்தின் செயற்திட்ட  யோசனை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன்   ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் இருந்து விலகுவோம் என்றே ஒரு தரப்பினர் எதிர்பார்த்தார்கள்.  

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். முழுமையான அரசாங்கத்தை  நான்கு மாதங்களுக்கு முன்னரே அமைத்தோம். பொருளாதார  ஸ்தீரத்தன்மையை  உறுதிப்படுத்தினோம். கடந்த  டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி வங்குரோத்து நிலையில் இருந்து வெளியேறினோம்.  பிரதான கடன் வழங்குநர்களுடன்  இணக்கமான தீர்மானத்துக்கு வந்துள்ளோம்.

வங்குரோத்து நிலையடைந்ததால் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டோம். கடவத்தை - மீரிகம அபிவிருத்திக்கு சீன  எக்சிம் வங்கி கடன் வழங்கியது. வங்குரோத்து என்று அறிவித்ததன் பின்னர் சீன வங்கி கடன் வழங்கலை இடைநிறுத்தியது. இந்த அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டதால்  நிர்மாணிப்பு கம்பனிக்கு  46 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது..இது ஒரு எடுத்துக்காட்டு மாத்திரமே.

வங்குரோத்து நிலையில் இருந்து  வெளியேறியதன் பின்னர்  ஜப்பான்  அரசாங்கத்தின் 11  கருத்திட்டங்களும், சீனாவின்  76 கருத்திட்டங்களும் மீள ஆரம்பிக்க இணனக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.இதுவே பொருளாதாரத்தில் ஸ்திர நிலைமை. சிறந்த எடுத்துக்காட்டு.

இந்திய அரசாங்கத்துடன்  கூட்டிணைந்து சாம்பூர் பகுதியில் மின்நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனத்துக்கும், மின்சார சபைக்கும் 50: 50 என்ற வகையில் உரிமத்தை கொண்டதாக கூட்டு  நிறுவனம் ஒன்று  ஸ்தாபிக்கப்படும். இதனூடாக  சம்பூர் பகுதியில்  120 மெகாவோட் மின்னுப்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்படும். மின்சார சபை இதனை கொள்வனவு செய்யும்.குறைந்தளவான விலையில் மின்சாரத்தை  கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும்  ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தருவார் இதன்போது  சம்பூர் மின்நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான உறுதிப்பாட்டை  வழங்கியுள்ளோம். மன்னாரில்  50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படும் காற்றாலை  திட்டம் ஆரம்பிக்கப்படும்.

பொருளாதார ரீதியில் தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் மற்றும்  கடன் வழங்நர்களுக்கும் நம்பிக்கையளித்துள்ளோம்.டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை உறுதிப்படுத்தியுள்ளோம். வங்கிக் கட்டமைப்பின் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையை  வெற்றிக்கொண்டுள்ளோம். வங்கி வட்டி வீதத்தை ஒற்றை இலக்கத்துக்கு  கொண்டு வந்துள்ளோம்.

வரி வருமானத்தை அதிகளவில் ஈட்டிக் கொள்ளும் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளோம். இந்த  மூன்று மாத காலங்களில்  இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின்  வருமானம் எதிர்பார்த்த நிலைமை காட்டிலும்  அதிகரித்துள்ளது. இந்த  சாதக நிலையை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வோம்.

தனிப்பட்ட முயற்சியாளர்கள் பொருளாதாரத்தின் மீது கொண்டிருந்த  நம்பிக்கையின்மையை  இல்லாது நம்பிக்கை கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.தரவுகளை அடிப்படையாக்க கொண்டு பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.பொருளாதாரத்துக்கு பாதிப்பு  ஏற்படாத வகையில் தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளாந்தம் மீளாய்வு  பணிகளை முன்னெடுத்துள்ளோம்.  அவதான நிலையில் இருந்துக் கொண்டு தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும்  வகையிலான பொய்யை  மக்கள் மத்தியில் குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனை தவிர்த்து வேண்டிய அளவில்  அரசியல் செய்துக் கொள்ளுங்கள்.பொருளாதார ஸ்திரப்படுத்தல் என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும். ஆகவே பொருளாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க வேண்டாம்.

பொருளாதார ரீதியில் ஏதேனும் சந்தேகம் காணப்பட்டால் எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள். சந்தேகத்துடனான விடயங்களை மக்கள் மத்தியில் குறிப்பிட வேண்டாம்.  பொருளாதார ரீதியிலான விடயங்களுக்காக  பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளேன்.

பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஆட்சிக்கு வந்தவுடன் முன்னெடுத்தேன். நெற்பயிர்ச்செய்கைக்கான நிவாரண கொடுப்பனவை 15 ஆயிரம்  ரூபாவாக அதிகரித்தேன். அஸ்வெசுன நலன்புரித் திட்டத்தின் சகல கொடுப்பனவுகளையும்  அதிகரித்துள்ளோம்.   நலன்புரி கொடுப்பனவு திட்டத்தில் இருந்து நீக்கப்படும் பட்டியலில் இருந்த 8 இலட்ச பயனாளர்களை மீண்டும்  திட்டத்துக்குள் உள்வாங்கியுள்ளோம். நெருக்கடியான நிலையில் எவரையும் புறக்கணிக்கவில்லை.

16 இலட்ச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 6000 ரூபா வழங்கியுள்ளோம். அதேபோல்  நீரழிவு நோயாளர்கள், சிரேஷ;ட பிரஜைகளுகள்,  விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்துள்ளோம்.புலமை பரிசில் மற்றும் மாஹபொல கொடுப்பனவுகளை சடுதியாக  அதிகரித்துள்ளோம். பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களுக்கும்  வி சேட கொடுப்பனவுகளை வழங்கும் முன்மொழிகளை முன்வைத்துள்ளோம். அநாதை இல்லங்களில் வாழும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே எவரையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. மறக்கவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச சேவையாளர்களும், மூளைசாலிகளும் நாட்டை விட்டு வெளியேறும் நிலையே காணப்பட்டது.  நெருக்கடியான  நிலையில் அரச சேவையாளர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தகவல்  தொழில்நுட்பத்தை அரச சேவைக்குள் உள்ளடக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.அரச சேவையாளர்களின் அடிப்படை சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் இதர  கொடுப்பனவுகள் அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பள அதிகரிப்பு எதிர்வரும் மாதம் முழுமையாக கிடைக்கப்பெறும்.உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம்  செய்யப்பட்டுள்ளது.. சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே வினைத்திறனான சேவையை எதிர்பார்க்கிறோம்.

பாராளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வேண்டாம்  என்று கடிதம் வழங்கியுள்ளேன். மாற்றத்தை என்னில் இருந்தே ஆரம்பிப்பேன். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினருமான ஓய்வூதிய கொடுப்பனவையும், ஜனாதிபதிக்கான கொடுப்பனவையு; பெற்றுக்கொண்டு பலர் திருட்டு பூனை போல் இருந்துள்ளார்கள்.பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்  அமைச்சரானதன் பின்னர், உறுப்பினருக்கான கொடுப்பனவும்  கிடைக்கப்பெறும், அமைச்சருக்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.  கரண்டி கையில் உள்ளதால் இவர்கள் தமக்கு வேண்டியதை போன்று பரிமாற்றிக் கொண்டார்கள்.

என் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அமைச்சு , பிரதி அமைச்சு பதவிகளுக்கான கொடுப்பனவுகளை மாத்திரமே பெறுகிறார்கள். இந்த நாட்டை  திருத்துவதற்கு  நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். மக்களின் வரிப்பணத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கும்,முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை வரையறுப்பதற்கும் உரிய சட்டமூலம் வெகுவிரைவில்  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அனைவரும் கையுயர்த்த தயாராக இருங்கள்.

10 இலட்சமாக காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவு 250000 ரூபாவாக குறைக்கப்படும். கோவப்பட வேண்டாம் எவருக்கும் வாக ன இறக்குமதிக்கான அனுமதிபத்திரம் கிடையாது. நாட்டை கட்டியெழுப்ப அரசியல்வாதிகள் அர்ப்பணிப்பு செய்வார்களாயின், அரச சேவையாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு  சிறந்த முறையில் தீர்வு காணப்படும். 35 ஆயிரம் பட்டதாரிகளுக்கு  நியமனங்கள் வழங்கப்படும். தகுதிகளின் அடிப்படையில் தான் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்படும். முறையற்ற வகையில் நியமனங்களை வழங்க முடியாது. கடந்த கால அரசாங்கங்கள்  முறையற்ற வகையில் அரச சேவைகளுக்கு நியமனங்களை வழங்கியதால் தான் அரச சேவை கட்டமைப்பு இன்று  நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஆகவே இதனை மாற்றியமைக்க வேண்டும். அரசியலுக்காக இவ்விடயத்தை  பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் எ;ன்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில்  உபகுழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. குறித்த   அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வெகுவிரையில்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறந்த மாற்றததை எதிர்பார்த்துள்ளோம். அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும். வரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். செலுத்தப்படும்  வரியின் ஒவ்வொரு ரூபாவும் சிறந்தமுறையில்  பயன்படுத்தப்படும் என்று  வரிச் செலுத்துவோருக்கு உறுதியளிக்கிறேன். வரி செலுத்துங்கள். நாங்கள் அதனை பாதுகாக்கிறோம். வரி செலுத்துவோருக்கு   விசேட சலுகை பொதிகள் வழங்கப்படும்.

வரி செலுத்தும் வர்த்தகர் வீதியில்   வாகனத்தை நிறுத்தி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார். வரியை  செலவிடுபவர்கள் சுகபோகமாக செல்கிறார்கள்.இவ்வாறான நிலையில் எவ்வாறு  வர்த்தகர்கள் வரி செலுத்துவார்கள். இந்த நிலையை மாற்றியமைப்போம். மக்களின் வரி சிறந்த முறையில் பயன்படுத்தப்படுமாயின் வரி செலுத்துவோர் முறையாக வரி செலுத்துவார்கள்.இதற்கான சூழலை உறுதிப்படுத்துவோம். சுங்கம் மற்றும் இறைவரித் திணைக்களத்தில் இருந்து இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.  ஊழல் முழுமையாக இல்லாதொழிக்கப்படும். ஊழல் என்பது பொருளாதார குற்றம். ஆகவே  ஊழல் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்போம். ஆகவே அரச ஊழியர்கள் அனைவரும் தயவு செய்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊழல் இருந்தால் வேலையில்லை, வீடு செல்ல வேண்டும்.

மன்னார் காற்றாலை  மின்திட்ட உற்பத்திக்கு குறைவான விலையில் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது. மக்களின் சுமைகளை தோளில் சுமந்துக் கொண்டு தொங்கு பாலத்தில் செல்கிறோம்.  ஒரு ரூபா கூட மோசடி  செய்வதற்கு எவருக்கும் இடமளிக்க போவதில்லை.இதனை எவ்வாற ஒன்றும் செய்யவில்லை என்று குறிப்பிடுவீர்கள்.இது குடும்ப அரசாங்கமோ அல்லது நண்பர்களின் அரசாங்கமோ இல்லை. மக்களின் அரசாங்கம்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி எதிர்கால இலக்கு நோக்கி பயணிக்கிறோம்.இதில் என்ன தவறுள்ளது. ஏன் இதனை மாற்றியமைக்க வேண்டும். தற்போதைய முன்னேற்றத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும். எம்மை ஆசிர்வதிப்பதும், ஏற்றுக்கொள்வதும் தவிர வேறொன்றும் எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது. ஊடகங்கள் அரசியல் செய்த காலம் முடிவடைந்துள்ளது. அதனால் தான் நான்  ஜனாதிபதிபதியாகியுள்ளேன். ஊடக அரசியல் தோல்வியடைந்துள்ளது. மக்களுடனான எமது அரசியல் தான் வெற்றிப்பெற்றுள்ளது.

எவருடனும் எனக்கு தனிப்பட்ட பகைமை கிடையாது. ஆகவே தயவு செய்து மாற்றமடையுங்கள். நாட்டை  கட்டியெழுப்பும்  அரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.சுதந்திரத்துக்கு பின்னர்  கிடைத்த அனைத்து வாய்ப்புக்களையும் தவறவிட்டோம்.  பெருந்தோட்ட மக்கள் மற்றும் வடக்கு மக்களை இணைத்துக் கொண்டு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 1948 ஆம் ஆண்டு கிடைத்த  சிறந்த வாய்ப்பை   முறையாக பயன்படுத்திக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைந்திருக்கலாம். ஆகவே தற்போதைய  அரிய வாய்ப்பை ஒருபோதும் பலவீனமடைய போவதில்லை.  நாட்டை முன்னேற்றும்  இலக்கினை  வெற்றிக்கொள்வோம். இந்த சிறந்த வாய்ப்பில் எதிர்க்கட்சிகளும் பங்குதாரர்களாக வேண்டும் என்று  எதிர்க்கட்சிகளுக்கு  அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46