(நெவில் அன்தனி)
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் ஓட்டத் திருவிழாவின்போது நடத்தப்படவுள்ள சர்வதேச தொடர் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற வருகை தருமாறு இந்தியா, பிலிப்பைன்ஸ, மாலைதீவுகள் ஆகிய அணிகளுக்கு ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.
சீனாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள உலக தொடர் ஓட்டப் போட்டிக்கான அடைவு மட்டத்தை எட்டுவதற்கான வாய்ப்பை இலங்கையின் ஆண்களுக்கான 4 x 400 மிற்றர் தொடர் ஓட்ட அணிக்கு பெற்றுக்கொடுக்கும் முயற்சியாக இது அமையவுள்ளது.
சீனாவின் குவாங்சூவில் எதிர்வரும் மே 10ஆம், 11ஆம் திகதிகளில் உலக தொடர் ஓட்ட சம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. அப் போட்டியில் பங்குபற்றுவதற்கு அவசியமான தரவரிசை மட்டத்தில் இலங்கை இருக்கிறது.
தாய்லாந்தின் பாங்கொக்கில் கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 04.48 செக்கன்களில் ஓடி முடித்து இலங்கை அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தது.
இதற்கு அமைய ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டத்திற்கான உலக தரவரிசையில் இலங்கை 31ஆவது இடத்தில் இருக்கிறது.
எனினும், உலகம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களில் பல போட்டிகள் நடைபெறவிருப்பதால் அடைவு மட்டத்துக்கான தரவரிசையை இலங்கை தக்கவைக்க வேண்டி வரும்.
ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குரிய உலக தரவரிசையில் முதல் 32 இடங்களைப் பெறும் ஆண்கள் அணிகளே 4 x 400 தொடர் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறும்.
சீனாவில் இன்று ஆரம்பமான 21ஆவது உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பயின்ஷிப்பில் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை பங்குபற்றுகிறது. ஆனால் இலங்கை தொடர் ஓட்ட அணியில் முதல் நிலை வீரர் அனுர தர்ஷன இடம்பெறாதது இலங்கை அணிக்கு பாதிப்பை தோற்றுவித்ததுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பல்வேறு மெய்வல்லுநர் போட்டிகளில் அருண தர்ஷன பங்குபற்றவுள்ளார்.
மேலும் இம்முறை உலக மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 400 ஓட்டப் போட்டிக்கான அடைவு மட்டத்தை கடினமான 44.85 செக்கன்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் நிர்ணயி;துள்ளது.
இதற்கு அமைய 17 வீரர்கள் மாத்திரமே நேரடி தகுதியைப் பெறுவற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்றைய 31 வீரர்கள் தரவரிசை அடிப்படையில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றற தகுதிபெறுவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM