(நெவில் அன்தனி)
சீனாவின் நஞ்சிங் நகரில் இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமான 21ஆவது உலக உள்ளக சம்பியன்ஷிப்பில் முதலாவது தங்கப் பதக்கத்தை இத்தாலி வீரர் அண்டி டயஸ் ஹேர்னண்டஸ் சுவகீரித்தார்.
ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குபற்றிய டயஸ் ஹேர்னண்டஸ், 17.80 மிற்றர் தூரத்திற்கு பாய்ந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
உலக முப்பாய்ச்சல் போட்டியில் இந்த வருடத்திற்கான அதிசிறந்த தூரப் பெறுதியாக வும் இத்தாலிக்கான தேசிய சாதனையாகவும் இது அமைந்துள்ளது.
உள்ளக அரங்க முப்பாய்ச்சல் போட்டி வரலாற்றில் இது ஐந்தாவது அதிசிறந்த தூரப் பெறுதியாகவும் பதிவாகியுள்ளது.
இப் போட்டியில் சீன வீரர் யமிங் ஸூ 17.33 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
புர்க்கினா பாசோ நாட்டைச் சேர்ந்த ஹியூஸ் ஃபெப்ரிஸ் ஸங்கோ 17.15 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற இருவரும் இந்த பருவகாலத்திற்கான தத்தமது அதிசிறந்த தூரப் பெறுதியைப் பதிவுசெய்தனர்.
இதேவேளை, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் தென் கொரிய வீரர் ஷங்யொக் பூ 2.31 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கதை வென்றெடுத்தார்.
நியூஸிலாந்து வீரர் ஹாமிஷ் கேர் (2.28 மிற்றர்) வெள்ளிப் பதக்கதையும் ஜெமெய்க்கா வீரர் றேமண்ட் றிச்சர்ட்ஸ் (2.28 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM