(நெவில் அன்தனி)
லாஓஸ் அணிக்கு எதிராக லாஓஸ் தேசிய விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (20) இரவு நடைபெற்ற சர்வதேச சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை 2 - 1 என்ற கொல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் லாஓஸை 22 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை வெற்றிகொண்டுள்ளது.
தாய்லாந்துக்கு எதிராக எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆவது சுற்றில் விளையாடவுள்ள இலங்கைக்கு இந்த வெற்றி பெரு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
லாஓஸுடனான போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய இலங்கை, போட்டியின் 17ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் போட்டது.
லாஓஸ் பெனல்டி எல்லைக்கு வெளியே இடதுமத்திய பகுதியிலிருந்து சாம் டுரான்ட் உயர்வாக பறிமாறிய பந்தை வேட் டெக்கர் தனது தலையால் முட்டி கோல் போட்டு இலங்கையை முன்னிலையில் இட்டார்.
இடைவேளையின்போது இலங்கை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் பெரும்பகுதியில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இலங்கை 55ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட்டது.
இம்முறை இடது பக்கத்திலிருந்து சாம் டுரான்ட் உயர்த்தி பரிமாறிய பந்தை மாற்று வீரர் ஒலிவர் கெலாட் தலையால் முட்டி மற்றொரு மாற்று வீரர் வசீம் ராஸிக்குக்கு பரிமாறினார்.
உடனடியாக செயல்பட்ட வசீம் ராஸீக் பந்தை ஆதவன் ராஜமோகனுக்கு தாழ்வாக பரிமாறினார். ராஜமோகன் பந்தை ஓங்கி உதைத்து தனது அணியின் இரண்டாவது கொலைப் போட்டார்.
எவ்வாறாயினும் போட்டி முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருந்தபோது லாஓஸ் வீரர் கிடவோன் சௌவன்னி ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டார்.
யுகுஊ ஆசிய கிண்ண மூன்றாம் சுற்றுப் போட்டியில் தாய்லாந்தை, ராஜமங்களம் விளையாட்டரங்கில் இலங்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) எதிர்த்தாடவுள்ளது.
AFC ஆசிய கிண்ண தகுதிகாண் மூன்றாம் சுற்றில் டி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. இக் குழுவில் தாய்லாந்து, சைனீஸ் தாய்ப்பே, துர்க்மேனிஸ்தான்ஆகிய அணிகளை அந்நிய மண்ணிலும் சொந்த மண்ணிலும் இரண்டு தடவைகள் எதிர்த்தாடும்.
முதலாம் கட்டத்தில் தாய்லாந்தைத் தொடர்ந்து சைனீஸ் தாய்ப்பேயை ஜூன் 10ஆம் திகதியும் துர்க்மேனிஸ்தானை அக்டோபர் 14ஆம் திகதியும் அந்நிய மண்ணில் இலங்கை எர்த்தாடும்.
இரண்டாம் கட்டப் போட்டிகள் இலங்கையில் நடைபெறும்.
இரண்டாம் கட்டத்தில் துர்க்மேனிஸ்தானை அக்டோபர் 14ஆம் தேதியும் தாய்லாந்தை நவம்பர் 18ஆம் திகதியும் சைனீஸ் தாய்ப்பேயை 2026 மார்ச் 31ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM