(செ.சுபதர்ஷனி)
மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்துக்கு வந்திருந்த சந்தேகத்திற்கிடமான சரக்குப் பொதிகளில் இருந்து சுமார் ஒரு கோடி 78 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்திற்கு கிடைத்த சந்தேகத்திற்கிடமான 20 சரக்கு பொதிகளை சுங்க தபால் மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனைக்கு உட்படுத்திய போதே மேற்படி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த இரு வார காலப்பகுதியில் பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து விமான தபால் சேவையின் மூலம் குறித்த சரக்கு பொதிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கண்டி, நீர் கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்கல்ல, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், இரு வாரங்கள் கடந்தும் சரக்குப் பொதியின் உரிமையாளர்கள் அவற்கை பெற்றுக்கொள்ள முன் வராத காரணத்தினால், கடந்த புதன்கிழமை (19) தபால்மா அதிபரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அவற்றை திறந்து பார்த்து சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.
இதன்போது, 14 சரக்குப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 272 கிராம் குஷ் மற்றும் 2,049 போதை மாத்திரைகள் என்பன அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப்பெறுமதி சுமார் ஒரு கோடி 78 இலட்சம் ரூபா என சுங்க பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM