161ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் தின நிகழ்வு பம்பலப்பிட்டி பொலிஸ் சிரேஷ்ட படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுச் சின்னத்திற்கு முன்பாக, பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, இரத்தம் சிந்தி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் உச்சபட்ச தியாகத்தை நினைவு கூரும் வகையில் பொலிஸ் மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வெள்ளிக்கிழமை (21) பொலிஸ் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பொலிஸ் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்பைத் தொடர்ந்து, பதில் பொலிஸ்மா அதிபர் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
போர் மற்றும் சட்டம் ஒழுங்கு கடமைகளில் ஈடுபட்டிருந்த போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த 30 பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற 20 பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்வின்போது ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர்கள், அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM