ஆயிரத்து தொள்ளாயிரமாம் ஆண்டு கொழும்பு நகரிலே சேர்ச் மிஷனரி சங்கத்தின் உதவியோடு செல்வி லிலியன் நிக்சனால், மகளிருக்கென உருவாக்கப்பட்ட இலங்கையின் முதல்தர பாடசாலைகளுள் ஒன்றே கொழும்பு மகளிர் கல்லூரி.
கல்லூரியின் நூற்றி இருபத்தைந்தாவது அகவையை முன்னிட்டு அதிபர் திருமதி. தீபிகா தசநாயக்க, உப அதிபர் திருமதி. ரன்மலி பாலசூரிய ஆகியோரின் வழிகாட்டலுடன் தமிழ் மாணவர் சங்கம் அரங்கேற்றும் 'பெண்மையைப் போற்றுவோம்' என்ற நாட்டிய நாடாகமானது, முப் பொருட்களான வீரமங்கை வேலு நாச்சியாரின் சரித்திரத்தை மங்கைக்குள் இருக்கும் வீரத்தை பறைசாற்றவும் கருணை உள்ளம் அன்னை தெரேசாவின் வாழ்வை பெண்ணுக்குள் இருக்கும் கருணையின் வெளிப்பாடாகவும் கொண்டு அதனோடு மகளிரின் கல்விக்காக தம்மை அர்ப்பணித்த இக் கல்லூரியின் மாண்புமிகு அதிபர்களின் அளப்பரிய சேவைகளையும் எடுத்துரைக்கும் நாட்டிய நாடகமே இப் பெண்மையைப் போற்றுவோம்.
இக்கலை நிகழ்வு மகளிர் கல்லூரியின் இவ் வருடத்துக்கான முதற் படைப்பாக அரங்கேறவுள்ளது. இந் நாட்டிய நாடகமானது தேசபந்து. திருமதி. பவானி குகப்பிரியாவின் நெறியாள்கை செய்யப்பட்டமை சிறப்பிற்குரியது.
மகளிர் கல்லூரியின் தமிழ் மாணவர் மன்றம் கால்கோளிடப்பட்டு தொன்னிற்றி மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற இவ் வேளையில் அதன் மொழிப்பணி இயல், இசை, நாடகம் என முத்தமிழை மெருகூட்டி வளப்படுத்தி வருகின்றது.
மகளிர் கல்லூரியின் தமிழ் மாணவர் மன்றம் தன் முதல் நாட்டிய நாடகமாக தமயந்தியினை ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எண்பதாம் ஆண்டு அரங்கேற்றியது. அதனைத் தொடரந்து ஸ்கந்த லீலா, உமா, திரௌபதி சபதம், ராம காதை, ராவண ராஜ்ஜியம் ஆகிய கலை நிகழ்வுகளின் வரிசையில் இம் முறை பெண்மையைப் போற்றுவோம் என்ற நாட்டிய நாடகத்தை வழங்குகின்றது.
மன்ற மாணவர்கள் தமிழ் அன்னையை செம்மையாக்குவதற்கு ஒவ்வொரு வருடமும் தேன் தமிழுக்கு ஆரம் என்ற கலை நிகழ்வை நடத்தி வருகின்மை சிறப்பிற்குரியது. அத்துடன் இம் மன்றம் மாணவர்களிடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் சமூகத் தொண்டுகளை ஆற்றி வருகின்றது. கல்லூரியின் தமிழ் மாணவர் மன்றத்தின் வளர்ச்சிக்கு அதன் பொறுப்பாசிரியர்கள், மன்ற உறுப்பினர்கள் என எண்ணற்றோர் வழி சமைத்துள்ளனர்.
இந் நாட்டிய நாடகமானது இம் மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நுழைவுச் சீட்டுக்களை மண்டபத்தின் வாயிலில் பெற்றுக்கொள்ளலாம். நுழைவுச் சீட்டுகள் - ரூபாய் 2500, ரூபாய் 2000,ரூபாய் 1500.
தமிழ் மாணவர் மன்றம் 24/25
மன்றப் பொறுப்பாசிரியை - திருமதி கனிமொழி தேவசுதன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM