இன்றைய திகதியில் உலகம் முழுவதும் பன்னிரண்டு மில்லியன் மக்கள் பார்க்கின்சன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. முதுமையின் காரணமாகவும், எம்முடைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் விவரிக்க இயலாத பாதிப்பின் காரணமாகவும் பார்க்கின்சன்ஸ் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இதற்கு தற்போது அட்வான்ஸ்டு அபோமார்பைன் பம்ப் தெரபி எனும் சிகிச்சை அறிமுகமாகி நிவாரணமளிக்கிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பார்க்கின்சன் நோய் என்பது நரம்பு மண்டலத்தின் இயக்கத்தில் ஏற்படும் குறைபாடு என குறிப்பிடலாம். இது நாளடைவில் மோசமடைந்து உடல் இயக்கத்தை பாரிய அளவில் பாதிக்கிறது. ஏனெனில் நரம்பு மண்டலம் என்பது எம்முடைய உடல் இயக்கத்தை கட்டுப்படுத்தும் அமைப்பாகும்.
இத்தகைய பாதிப்பிற்கான அறிகுறிகள் பொதுவாக கை அல்லது கால்களில் ஏற்படக்கூடும். சில தருணங்களில் சிலருக்கு கவனிக்கத்தக்க அளவில் நடுக்கம் ஏற்படக்கூடும். உடல் உறுப்புகளை இயக்குவதில் சமச்சீரற்ற நிலையும், சமநிலையில் பராமரிக்கும் போது சிக்கலையும் ஏற்படுத்தும்.
முதுமையின் காரணமாக இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் ஏற்பட்டாலும் இதற்கு தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் வரை முறையான மற்றும் முழுமையான மருந்தியல் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
சிலருக்கு சத்திர சிகிச்சை மூலமாகவும் நிவாரணம் பெறலாம். இத்தகைய தருணங்களில் வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் மருந்தியல் சிகிச்சையின் பக்க விளைவுகள் காரணமாகவும், உட்கொள்ளும் மருந்துகளின் வீரியம் குறைவதன் காரணமாகவும் உடல் இயக்கம் தொடர்பானவற்றில் முழுமையான நிவாரணம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறு குறைகிறது.
இத்தகைய இத்தகைய தருணங்களில் நோயாளிகளுக்கு நிவாரணம் தருவதற்காக அட்வான்ஸ்டு அபோமார்பைன் பம்ப் தெரபி எனும் சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருகிறது.
இத்தகைய சிகிச்சையின் போது நோயாளிகளின் உறுப்புகள் இயக்கத்தின் போது ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் அதனை சீராக்குவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுவதற்கும் இத்தகைய தெரபி முழுமையான நிவாரணத்தை வழங்குகிறது. மேலும் இதிலிருந்து ஆற்றல் மிக்க டோபமைன் அக்கோனிஸ்ட்டான அவோமார்பின் தொடர்ச்சியாக உடலுக்குள் செலுத்தப்பட்டு, நிவாரணம் கிடைக்கிறது. தற்போது இந்த சிகிச்சையில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் நிவாரணம் உடனடியாக கிடைக்கிறது.
வைத்தியர் பாபு
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM