மாதவன் நடிக்கும் 'டெஸ்ட் ' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

21 Mar, 2025 | 03:57 PM
image

பான் இந்திய நட்சத்திர நடிகரான மாதவன், நயன்தாரா, சித்தார்த், ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'டெஸ்ட்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' ஹோப்' எனும் இரண்டாவது பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் எஸ். சசி காந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டெஸ்ட்' எனும் திரைப்படத்தில் மாதவன் , சித்தார்த்,  நயன்தாரா,  மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விராஜ் சிங் கோஹில் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் இயக்குநர் எஸ். சசிகாந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதியன்று நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நேரடியாக வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ' ஆவளி மேகங்கள் மொய்யும் வானிலை ஆவலில் மண்மீது பூமி குளிருமோ..'  எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் ராஜேஷ் ஸ்ரீதர் எழுத, பின்னணி பாடகியும் , இசையமைப்பாளருமான சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார்.  மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right