ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து

Published By: Digital Desk 3

21 Mar, 2025 | 03:26 PM
image

லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில்  ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹீத்ரோவுக்கான  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை (21) பகல் 12:50 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள்  UL 503 (கொழும்பு - லண்டன் வரை) மற்றும்  இரவு 20:40 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த UL 504 (லண்டன் - கொழும்பு வரை) ஆகியவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

"சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறோம். உங்கள் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி. விமான நிறுவனம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் ஹீத்ரோ மீண்டும் திறக்கப்பட்டவுடன் லண்டனுக்கு மீண்டும் விமான சேவைகள்  ஆரம்பிக்கப்படும்" என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

உதவி தேவைப்படும் பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் மையத்தை 1979 (இலங்கைக்குள்), +94117 77 1979 (சர்வதேசம்) அல்லது +94744 44 1979 (வட்ஸ்அப் ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாற்றாக, அவர்கள் அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது பயண முகவரைத் தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48