சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது - அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ

21 Mar, 2025 | 05:05 PM
image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது உடனடி கவனத்தைக் கோரும் மூலோபாய சவால்களை உருவாக்குகிறது. அதனால் தான் ஜனநாயக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியமாகும் என அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ தெரிவித்தார்.

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ வியாழக்கிழமை (20) தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் செய்தார்.

அட்மிரல் பபாரோ தனது விஜயத்தின் போது, இலங்கையின் மூத்த அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுடன் இணைந்து, நீடித்த அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் தொலைநோக்குப் பார்வை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை, தளபதி பபாரோவின் வருகை அடிக்கோட்டிட்டு காட்டியது.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, 

“நமது சவால்களைப் பற்றி நேரடியாகப் பேசுவோம். நாடுகளின் உறுதியான நடத்தை பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச விதிமுறைகளை அச்சுறுத்துகிறது, வர்த்தகத்திற்கு அவசியமான வழிசெலுத்தல் சுதந்திரத்தை நேரடியாகப் பாதிக்கிறது. சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது உடனடி கவனத்தை கோரும் மூலோபாய சவால்களை உருவாக்குகிறது. அதனால் தான் ஜனநாயக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியமாகும்.

பயங்கரவாதம், ஆயுதப் பெருக்கம், கடத்தல், கடற்கொள்ளை போன்ற நாடுகடந்த அச்சுறுத்தல்கள் தினமும் பாதுகாப்பையும் செழிப்பையும் பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதில்லை. இன்னும், தொழில்நுட்ப புரட்சி கடல்சார் பாதுகாப்பை மாற்றியமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, விரைவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆகியவை கடலில் செயல்பாடுகளை அடிப்படையில் மாற்றியமைக்கின்றதாக அமையும். இந்த தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள்” என தெரிவித்தார்.

“உண்மையில், இந்தியப் பெருங்கடலின் குருக்கே இலங்கையானது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த கடற்கரைகள் பசுபிக் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய கடல் பாதைகளை எல்லையாகக் கொண்டுள்ளன. மேலும் இலங்கை முழு பசுபிக் பெருங்கடலுக்கும் முக்கியமான கடல்சார் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறது.

மேலும், சர்வதேச பாதுகாப்புக்கு இலங்கை அளித்த சிறந்த பங்களிப்புகளை நான் அங்கீகரிக்கிறேன். அமைதி காக்கும் பணிகள், தொழில்முறையை வெளிப்படுத்துதல், ஒருங்கிணைந்த பணிக்குழு, தலைமைத்துவம், இது எனக்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாகும். இந்தத் தலைமைத்துவம் இலங்கையை ஒரு அத்தியாவசிய பங்காளியாக மாற்றும் மதிப்புகள் மற்றும் திறன்களைக் காட்டுகிறது.

உங்கள் தலைமைத்துவம் முக்கியமானது, உங்கள் குரல் முக்கியமானது, உங்கள் தொழில்முறைத் திறனும் முக்கியமானது, மேலும் எங்கள் கூட்டாண்மை முழு பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாகும்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48