நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுகிறது ; சஜித் பிரேமதாச

21 Mar, 2025 | 01:09 PM
image

(எம். ஆர். எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

கடந்த அரசாங்கம் உருவாக்கிய நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும், சாதாரண மக்களின் தோள் மீது சுமையைச் சுமத்தி மக்களை பழிவாங்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைக்கும், இரு தரப்பு கடன் உடன்படிக்கைக்கும், சர்வதேச பிணைமுறி தாரர்களுடன் உடன்படிக்கைக்கும் சென்று ஐ எம் எப் கூறுகின்ற வசனங்களுக்கு நடனமாடுகின்ற, ஐ எம் எப் இன் கைப்பாவையாக இந்த அரசாங்கம் உருவாகியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகைலே போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஐ.எம்.எப் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மக்களின் ஆணையை அப்பட்டமாக மீறும் ஒரு அரசாங்கம் நாட்டில் உள்ளது.ஏற்றுமதி மேம்பாடு இன்றியமையாத விடயம்.

அதன் மூலம் தொழில்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அதன் பலன்களை நாடு பல வழிகளில் பெற்றுக்கொள்ளும் .அதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.

எமது நாட்டுக்கு அதிக சதவீத முதலீடும், முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டமும் தேவை. அரசாங்கத்திற்கு அப்படியொரு விடயம் இருக்குமானால் அதனை முன்வைக்கவேண்டும். 

வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளுடன் போட்டிபோட்டு முந்திச்சென்று அதிக முதலீடுகளை நம் நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய வேலைத்திட்டம் ஒன்று இருக்க வேண்டும் என்ற போதிலும் அரசாங்கத்திடம் அவ்வாறான வேலைத்திட்டம் இல்லை.  

உழைக்கும் வர்க்கத்தினருக்காக தற்போதைய அரசாங்கத்தைப் போன்று குரல் உயர்த்தி கூச்சலிட்ட கூட்டம் இல்லையென்றாலும், கடந்த அரசாங்கம் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது உழைக்கும் மக்களின் நிதியைச் சுரண்டும்போது அதனை மாற்றுவோம் என்று சொன்னாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அதை மறந்துவிட்டுள்ளது.

35,000 பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்படாதது ஐ.எம்.எப் இன் ஆலோசனைகளை பின்பற்றுவதனாலா? எரிபொருள் நிவாரணம் பெருமளவில் வழங்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் அது இன்னும் கிடைக்கவில்லை. 

இந்த நாட்டின் உயர்மட்ட பணக்காரர்களைத் தவிர்த்து சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கம் செல்ல வேண்டும்.அந்த எதிர்பார்ப்புக்களை சிதைக்க வேண்டாம்.

வாகனமொன்றின் உரிமை பெற்றுத்தரப்படும் என்று சொன்னது போல் அது இன்று நடக்கவில்லை.  12 இலட்சத்தில் சிறிய கார் வாங்கலாம் என்ற மாபெரும் அறிவிப்பு இன்று கனவாகிவிட்டது. அந்த வாக்குறுதியை கூட சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையில் மறந்துவிட்டது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரித்து, நிலக்கரி டீசல் மாபியாவை இல்லாதொழிப்போம் என்று கூறினாலும், சூரிய சக்தித் துறையில் வர்த்தகர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இன்று நடைமுறைப்படுத்தப்படாமல், சூரிய சக்தி மூலம் வழங்கப்படும் கொள்முதல் தொகை இன்று குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மரண அடி விழுந்துள்ளது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51