ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப் பெரும் டெஸ்லா  நிறுவனம் 

Published By: Digital Desk 3

21 Mar, 2025 | 01:15 PM
image

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான சைபர் டிரக் கார்களை டெஸ்லா  நிறுவனத்தால்  திரும்பப் பெறப்பட்டுள்ளன. 

இந்த மொடல் கார்கள்  எட்டாவது தடவையாக திரும்ப பெறப்பட்டுள்ளன. இதனால் மின்சார காரின் டிரிமின் ஒரு பகுதி கழன்று விடுமோ என்ற கவலைகள் எழுந்துள்ளன.

2023 ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கப்பட்ட 46,000 க்கும் மேற்பட்ட டிரக் கார்களில் இந்தப் பிரச்சினை எற்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட அனைத்து சைபர் டிரக்குகளுக்கும் சமம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துக்கான கோரிக்கைக்கு பதிலளிக்காத டெஸ்லா, நிறுவனம் மற்றும் அதன் தலைவர் எலோன் மஸ்க் மீதான பின்னடைவுக்கு மத்தியில் விற்பனை வீழ்ச்சியுடன் போராடி வரும் நிலையில் இது வந்துள்ளது.

டெஸ்லா கார்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்கு தீ வைத்ததற்காக, "உள்நாட்டு பயங்கரவாதம்" பெயர் குறிப்பிடப்படாத மூன்று பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என அமெரிக்க சட்டமா அதிபர்  ஜெனரல் பாம் போண்டி தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனம் சைபர்ட்ரக்கின் விற்பனை விபரங்களை வெளியிடுவதில்லை, ஆனால் கார் தொழில்நுட்ப நிறுவனமான காக்ஸ் ஆட்டோமோட்டிவ் கடந்த ஆண்டு அமெரிக்காவில் சுமார் 39,000 விற்பனை செய்யப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது.

விண்ட்ஷீல்ட் வைப்பர்கள் செயலிழப்பு, முடுக்கி பெடல்கள் சிக்கிக்கொள்ளல், சக்கரங்களுக்கு இயக்க சக்தி இழப்பு போன்ற பிரச்சினைகளால் முன்னர் சைபர்ட்ரக் திரும்பப் பெற்றப்பட்டன.

ஜனவரியில் சைபர் டிரக் காரில் கேன்ட் ரயில் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் ஏற்பட்ட சிக்கல் குறித்து தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்திடம் (NHTSA) தாக்கல் செய்த ஆவணங்கள் தொடர்பில் டெஸ்லா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்:...

2025-04-22 20:58:16
news-image

உயர்கல்வியில் தலையிடுவதை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தவேண்டும்...

2025-04-22 12:36:12
news-image

பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவு ;  வத்திக்கானுக்கு...

2025-04-22 11:24:51
news-image

இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசராக...

2025-04-22 10:52:35
news-image

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம்

2025-04-22 09:25:56
news-image

பாப்பரசர் பிரான்ஸிஸ் உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளியிட்டது...

2025-04-22 09:08:36
news-image

இறுதி உயிர்த்த ஞாயிறு செய்தியில் காசாவின்...

2025-04-21 16:56:43
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 14:46:10
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31