விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம் குறித்து விசாரிக்க விமானப்படைத் தளபதியினால் சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல 05 தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், இன்று வெள்ளிக்கிழமை (21) குருநாகல் வாரியபொல பகுதியில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
விமானத்தின் இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல் மினுவங்கேட் கல்லூரி வளாகத்தில் பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர்.
இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும், பயிற்சி விமானி அதிகாரியும் இருந்தனர், மேலும் இந்த அதிகாரிகள் தற்போது குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து காலை 07.27 மணியளவில் புறப்பட்டு, காலை 07.55 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க விபத்து குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM