இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின் இடிபாடுகளிற்குள் இருந்து 25 நாள் பெண்குழந்தை உயிருடன் மீட்பு

Published By: Rajeeban

21 Mar, 2025 | 11:02 AM
image

காசாவில்  இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இன்டிபென்டன்ட் குழந்தையின் பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளதாவது

கான்யூனிசின் வீடொன்றின் இடிபாடுகளில் இருந்து மீட்பு பணியாளர்கள் 25 நாள் பெண் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர் . பெற்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துவிட்டனர்.

இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்மாடியொன்று முற்றாக சிதைவடைந்துள்ள நிலையில் மீட்பு பணியாளர்களிற்கு நம்பிக்கை ஒளியொன்று தென்பட்டது,குழந்தையொன்றின் மிக மெல்லிய அழுகையே அது.

திடீரேன இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்புபணியாளர் ஒருவர் குழந்தையொன்றை தாலாட்டியவாறு வெளியே வந்த போது ஆண்டவனே பெரியவன் என்ற குரல் எழுந்தது.போர்வையால் போர்த்தப்பட்ட குழந்தையொன்றை காத்திருந்த அம்புலன்சிற்கு கொண்டு சென்றனர் , அங்கு துணை மருத்துவபிரிவினர் அதனை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அவர்களது வீட்டை தரைமட்டமாக்கிய இஸ்ரேலின் தாக்குதலால் அந்த கைக்குழந்தையின் பெற்றோரும் சகோதரனும் கொல்லப்பட்டனர்.

நாங்கள் அங்கு காணப்பட்ட மக்களை கேட்டவேளைஅந்த குழந்தை பிறந்து ஒரு மாதம் அதிகாலை முதல் அவள் இடிபாடுகளிற்குள்ளேயே இருந்தால் என அவர்கள் தெரிவித்தனர் என சிவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஹசென் அட்டர் தெரிவித்தார்.

அவள் அழுவாள் பிறகு மௌனமாகிவிடுவாள்,நாங்கள் அவளை மீட்கும் வரை இந்த நிலையே காணப்பட்டது ஆண்டவனிற்கு நன்றி என குழந்தை மீட்கப்பட்ட தருணங்களை அவர் வர்ணித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31
news-image

உங்கள் தேசத்தின் சிறுபான்மையினர் நலனை பேணவும்’...

2025-04-18 15:24:04
news-image

உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிற்கு வழங்குவது...

2025-04-18 14:42:36
news-image

நடுவானில் கடத்தப்பட்ட விமானம் - பயணியின்...

2025-04-18 12:21:08
news-image

புளோரிடா பல்கலைகழகத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவம் -...

2025-04-18 11:01:33