சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக கிறிஸ்டி கவென்ட்ரி தெரிவு!

21 Mar, 2025 | 11:32 AM
image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் கிறிஸ்டி கவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர், இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி மற்றும் ஆபிரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேக்க நாட்டின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144 ஆவது சர்வதேச ஒலிம்பிக் குழுவின்  கூட்டத் தொடரில் 10-வது தலைவராக கிறிஸ்டி கவென்ட்ரி தெரிவு செய்யப்பட்டார்.

தலைவருக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுக்குள் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 41 வயதான சிம்பாப்வே விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் கிறிஸ்டி கவென்ட்ரி வெற்றி பெற்றார்.

2013 இல் இருந்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோமஸ் பெக், ஜூன் மாதம் பதவி விலக உள்ளார்.

அவருக்குப் பின்னர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டி கவென்ட்ரி, ஜூன் 23 ஆம் திகதி பதவியேற்பார்.

முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையான கிரிஸ்டி, 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்றார்.

இது குறித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கிறிஸ்டி கவென்ட்ரி தெரிவிக்கையில்,

"சர்வதேச ஒலிம்பிக் குழுவின்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், உற்சாகமாக இருக்கிறேன்! என் சக உறுப்பினர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்களுக்கு முன்பு ஜிம்பாப்வேயில் நீச்சல் அடிக்கத் தொடங்கிய இளம் பெண் இந்த தருணத்தை ஒருபோதும் கனவிலும் நினைத்திருக்க முடியாது.

"ஐஓசியின் முதல் பெண் தலைவராகவும், ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முதல் பெண் தலைவராகவும் இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வாக்கெடுப்பு பலருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் ஒரு முன்மாதிரியாக எனது பொறுப்புகளை நான் முழுமையாக அறிவேன்," என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோஹ்லி, படிக்கல் அபார அரைச் சதங்கள்...

2025-04-21 01:05:03
news-image

சென்னை சுப்பர் கிங்ஸை துவம்சம் செய்தது...

2025-04-21 01:02:12
news-image

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு...

2025-04-21 00:58:52
news-image

ஆசிய றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப்:...

2025-04-20 21:22:46
news-image

பாக் ஜலசந்தியை ஒற்றை காலுடன் நீந்திக்...

2025-04-19 17:38:51
news-image

ஆசிய றக்பி தரமுயர்வு போட்டியில் இலங்கை...

2025-04-19 14:05:33
news-image

18 வயதின் கீழ் ஆசிய மெய்வல்லுநர்...

2025-04-19 13:18:35
news-image

18 வயதின் கீழ் ஆசிய மெய்வல்லுநர்...

2025-04-19 01:03:53
news-image

பங்களாதேஷுக்கு எதிரான இளையோர் சர்வதேச ஒருநாள்...

2025-04-18 22:26:02
news-image

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற...

2025-04-18 01:22:12
news-image

18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-18 01:18:14
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தனது சொந்த மண்ணில்...

2025-04-18 01:14:18