அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20 அரசியல் கட்சிகளும், 24 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை நகர சபை, திருக்கோவில், அட்டாளைச்சேனை, இறக்காமம், தமண, உகன, நாமல் ஓயா, மஹா ஓயா, பதியத்தலாவ, காரைதீவு, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், ஆலையடிவேம்பு, லகுகல, நாவிதன்வெளி, தெஹியத்தகண்டி ஆகிய 19 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பி ஆகிய பிரதான கட்சிகள் உட்பட சுயேட்சைக் குழுக்களும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.
இம்முறை அதிகமான சுயேட்சைக் குழுக்கள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ளன. இதில் சம்மாந்துறை பிரதேச சபையை இலக்காகக் கொண்டு களமிறங்கியுள்ள நாபீர் பவுண்டேஷன் சுயேட்சைக் குழு சம்மாந்துறை பிரதேச சபையை அறுதிப் பெரும்பான்மையினால் கைப்பற்றுவதற்கான மக்களின் பெரும் ஆதரவு பாரியளவு இருப்பதை அவதானிக்க முடிகிறமையும் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய 4 தேர்தல் தொகுதிகளிலும் 19 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் கல்முனை மாநகர சபை தவிர்ந்த 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM