(எம்.வை.எம்.சியாம்)
தற்போதைய அரசாங்கம் மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளதா என்பதை இந்த தேர்தலின் ஊடாக அறிந்து கொள்ள முடியும். எனவே எதிர்வரும் தேர்தலில் மீண்டும் பரீட்சார்த்த செயற்பாட்டை செய்ய வேண்டாம். பரீட்சார்த்த வேலையை மீண்டும் செய்தால் நாட்டுக்கு ஏற்பட்டதே கிராமத்துக்கு ஏற்படும் என பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்ததுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அந்தக்கட்சியின் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே கொழும்பு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்திருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் தேர்தலில் மிக முக்கியமானதாகும். தமது எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா என்பதை இந்த தேர்தலின் ஊடாக அறிந்து கொள்ள முடியும். இதற்கு முன்னர் எடுத்த தீர்மானம் சரியானதா என்பதை மீள் பரிசீலனை செய்து கொள்ள முடியும்.
உண்மையில் மக்கள் பாரிய மாற்றத்தை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தனர். இந்த நாட்டில் இலஞ்சம் ஊழல் மோசடி நிறுத்தப்படும். இந்த நாடு பரிசுத்தமான நாடாக மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் வாக்களித்திருந்தனர்.
உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பணம் துபாய் மாளிகைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் மத்திய வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என அனைத்தும் மீள நாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.
அதனுடன் தொடர்புடைய் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றனர்.அந்த நம்பிக்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர்.
ஆனால் அவர்கள் குரங்கினால் மின்சாரம் தடைப்படுவதாக கூறுகிறனர். குரங்குகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.செவ்வந்தியை துரத்திக்கொண்டிருக்கிறார்கள். பொலிஸ் மா அதிபர் பதுங்கியிருந்தார். இதுபோன்ற கூத்துக்களே நாட்டில் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே, எதிர்வரும் தேர்தலில் மீண்டும் பரிசார்த்த செயற்பாட்டை செய்ய வேண்டாம் என நாம் மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம். பரிசார்த்த வேலையை மீண்டும் செய்தால் நாட்டுக்கு ஏற்பட்டதே கிராமத்துக்கு ஏற்படும்.எனவே கிராமப்புற மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM