அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால் மன்னிப்புக்கோருகின்றோம் ; சிறிதரன் எம்.பி

21 Mar, 2025 | 10:01 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா? பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றம் இன்னும் எத்தனையோ பேருக்கு பாயலாம். இது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம். அர்ச்சுனா பேசிய சில விடயங்களில் தவறுகள் இருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக அதற்கு மன்னிப்பு கேட்கின்றோம். முஸ்லிம் மக்கள் அதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எமது வினயமான வேண்டுகோளாகும். வரலாறு எம்மை தவறாக குறிப்பிட கூடாது என்பதற்காகவே இதனை சுட்டிக்காட்டுகிறேன் என்று  இலங்கைத்  தமிழரசுக் கட்சியின்  யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்தில் சபாநாயகரால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீதான தடைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக 8 நாட்களுக்கு அவருடைய பேச்சுகளை ஒளிபரப்பு செய்யப்படாமலும், ஹன்சாட்டில் பதியப்படாமல் இருப்பதற்கான செய்திகளை சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அவர் பாராளுமன்றத்திற்கு பொருத்தமில்லாத சொற்களை பயன்படுத்தியிருந்தார் என்று கூறப்பட்டது. இந்த சீருயர் சபையின் பொறுப்பாளர் என்ற வகையில் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நாங்கள் நடக்கின்றோம்.

பாராளுமன்ற  சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு  பெண்கள் மீதான அல்லது பெண்களுக்கு எதிரான வன்மங்களை கொண்டு வருவதையோ அல்லது ஒரு சமயம் சார்ந்து, மார்க்கம் சார்ந்து இருக்கின்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக வன்மங்களை கொட்டுவதையோ நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

எங்களுக்கும் முஸ்லிம் சகோததர்களுக்கும் இடையே நீண்ட கால அந்நியோன்ய உறவு உண்டு, கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட மனக் கசப்புகளை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்வது அல்லது அதை தோண்டிப் பார்ப்பதல்ல இப்போதைய நோக்கம்.

நாங்கள் தமிழ் பேசும் மக்களாக அவர்களுடைய மார்க்கம், சம்பிரதாயம்,  கலாச்சாரங்களை மதித்து நடப்பவர்களே. அதற்கு எதிரானவர்களும் அல்ல.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசிய சில விடயங்களில் தவறுகள் இருக்கலாம். அவ்வாறு தவறுகள் இருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம். 

முஸ்லிம் மக்கள் அதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எமது வினயமான வேண்டுகோளாகும். தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கான தடை இந்த பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா என்று யோசிக்கின்றேன். 

நான் நீண்ட நேர ஆய்வுகளின் பின்னர் இந்த பதிவை நான் செய்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றம் இன்னும் எத்தனையோ பேருக்கு பாயலாம்,  இது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம் என்ற வார்த்தைகள் சில தேடல்களை நோக்கி நகர்த்தியது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு தடைகள் விதிக்கப்படும் போது அது தொடர்பில் சக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை என்று வரலாறு எம்மை பழிக்க கூடாது என்பதற்காகவே இந்த விடயங்களை குறிப்பிடுகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46
news-image

ஊழல் அரசியலில் ஈடுபட்டவர்கள் தற்போது குழப்பமடைந்துள்ளனர்...

2025-04-20 21:20:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசியல் மயப்படுத்தி...

2025-04-20 20:54:36