அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் ; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

21 Mar, 2025 | 09:52 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எதனை செய்ய வேண்டும் என்பதை மக்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர். எனவே கொழும்பை அடிப்படையாக்கொண்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் நாம் வெற்றி பெறுவோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (20)  நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்ததது. இதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கொழும்பு மாவட்ட மேயர் பதவி வேட்பாளர் விராய் கெலி பல்தசார் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கொழும்பு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல,   

நாட்டு மக்கள் ஏற்கனவே தீர்மானம் எடுத்து விட்டனர். ஜனாதிபதித் தேர்தலில் எம்மை மக்கள்  வெற்றிப்பெற செய்தனர். அதேபோன்று பொதுத் தேர்தலிலும் எமக்கு பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தந்தனர். 

கிராமம் மற்றும் நகரத்தின் அதிகாரத்தை வேறு தரப்பினருக்கு வழங்குவதற்கு மக்களுக்கு மூளை தொடர்பான எந்தவொரு பிரச்சினை இல்லையென நான் நினைக்கிறேன்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எதனை செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்துள்ளனர். கொழும்பு மாநகர சபையில் சிங்களம் தமிழ் முஸ்லிம் மலே ஆகிய  மக்களை பிரதிநிதி துவப்படும் வகையில் சிறந்த பட்டியலை நாம் முன்வைத்துள்ளோம்.

கொழும்பை அடிப்படையாகக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் நாம் வெற்றி பெறுவோம். எனவே எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மேயர் பதவிக்கு போட்டியிடும் விராய் சகோதரியையும் ஏனைய உறுப்பினர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15
news-image

ஹொரவ்பொத்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-04-21 11:27:32
news-image

பண்டாரவளை- பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு!

2025-04-21 12:28:06
news-image

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு...

2025-04-21 12:27:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச...

2025-04-21 12:04:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு...

2025-04-21 12:03:11
news-image

update ; கெப் வண்டி விபத்து...

2025-04-21 12:13:38
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-21 11:59:15
news-image

மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின்...

2025-04-21 11:29:24