(துரைநாயகம் சஞ்சீவன்)
எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையளிக்கும் காலம் நேற்று வியாழக்கிழமை (20) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக 126 அரசியல் கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கையளித்திருந்தன.
இதில் 23 அரசியல் கட்சிகளினதும், 03 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 103 அரசியல் கட்சிகளினதும், 03 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான ஹேமந்த குமார தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை மாநகரசபை, கிண்ணியா நகரசபை உள்ளிட்ட 13 உள்ளுராட்சி மன்றங்களுக்கான 129 வட்டாரங்களில் 136 பேர் வட்டார ரீதியாகவும் 123 பேர் விகிதாசார அடிப்படையிலும் மொத்தமாக 259 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 103 அரசியல் கட்சிகளும், 03 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM