முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 வேட்புமனுக்கள் ஏற்பு ;  4 வேட்புமனு நிராகரிப்பு 

21 Mar, 2025 | 09:59 AM
image

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் 34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2 அரசியல் கட்சிகளினதும் 2 சுயேட்சை குழுக்களினதுமாக 4 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.  

வியாழக்கிழமை (20) மாலை வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த திங்கட்கிழமை (17 )  ஆரம்பிக்கப்பட்டு வியாழக்கிழமை (20)  பிற்பகல் 12 மணியளவில் நிறைவுக்கு வந்திருந்தது.  

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.   

கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்ததோடு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும் துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புனு தாக்கல் செய்ததோடு, மாந்தை கிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

இதில் மொத்தமாக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் 34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 

4 அணிகளின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 சுயேட்சைக் குழுக்களினதும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. பொதுஜன ஐக்கிய பெரமுன கட்சி, ஸ்ரீலங்கா மகஜன பக்சய ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46