மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118 வேட்பு மனுக்கள் தாக்கல் : 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

21 Mar, 2025 | 10:10 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 139 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் 118 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இதில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 101 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 நகரசபை, 1 மாநகரசபை, 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளூராட்சி சபைகளுக்காக  கோறளைப்பற்று வடக்கு சபையில் சர்வஜன அதிகாரம் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடைய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் பற்று பிரதேச சபையில் விநாயகமூர்த்தி விஜயராஜா தலைமையிலான சுயேட்சைக் குழு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அப்துல்லாப் முகமட் ஊசையின் என்பவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏறாவூர் நகர சபையில் 10 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சைக்குழு தாக்கல் செய்த 11 வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு 7 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுவுமாக 9 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இதில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் போரதீவுபற்று பிரதேச சபையில் 5 கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சிவனேசராசா ஒளிர்வளசுதன் மற்றும் அரசரத்தினம் சப்த தவதீஸ் ஆகியோரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழு உட்பட 10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி,பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சிகளுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் கருணாநிதி தர்சிகா என்பவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மண்முனைபற்று பிரதேச சபைக்கு 11 கட்சிகளும் 7 சுயேட்சைக் குழுக்களுமாக 18 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சோமசுந்தரம் மகேந்திரன் தலைமையிலான சுயேட்சைக்கு, கிருஸ்ணபிள்ளை கியானர்,மற்றும் செல்லத்துரை தங்கவேல் தலைமையிலான சுயேட்சைக் குழு மற்றம் ஸ்ரீலங்கா தொழிலாள் கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு 10 கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழு உட்பட 11 வேட்புமனுக்கள் தாக்கல் செய்தன. இதில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்க்கொள்ளப்பட்டுள்ளன.

காத்தான்குடி நகரசபையில் 7 அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்கள் உட்பட 10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இதில் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்புமன நிராகரிக்கப்பட்டதுடன்  மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு 7 அரசியல்கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்தன. அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு 5 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழு உட்பட 6 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தமாக 4 இலட்சத்து 55 ஆயிரத்து 520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 444 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன்  144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளில் இருந்து மொத்தமாக 274 பேர் தெரிவு செய்யப்படவுள்ளார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொத்தட்டுவ பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது...

2025-04-21 13:01:10
news-image

கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர்...

2025-04-21 13:12:03
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15
news-image

ஹொரவ்பொத்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-04-21 11:27:32
news-image

பண்டாரவளை- பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு!

2025-04-21 12:28:06
news-image

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு...

2025-04-21 12:27:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச...

2025-04-21 12:04:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு...

2025-04-21 12:03:11
news-image

update ; கெப் வண்டி விபத்து...

2025-04-21 12:13:38