திருகோணமலை மாவட்டத்தில் 103 அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட தகுதி

21 Mar, 2025 | 09:51 AM
image

எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையளிக்கும் காலம் வியாழக்கிழமை (20) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக 126 அரசியல் கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கையளித்திருந்தன. 

இதில் 23 அரசியல் கட்சிகளினதும், 03 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 103 அரசியல் கட்சிகளினதும், 03 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான WG.M.ஹேமந்த குமார தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை மாநகரசபை, கிண்ணியா நகரசபை உள்ளிட்ட 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 129 வட்டாரங்களில் 136 பேர் வட்டார ரீதியாகவும் 123 பேர் விகிதாசார அடிப்படையிலும் மொத்தமாக 259 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 103 அரசியல் கட்சிகளும், 03 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46