சங்கின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - நீதிமன்றை நாட முடிவு

21 Mar, 2025 | 09:39 AM
image

எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

அது தொடர்பில் அக் கட்சியின் சார்பில் ஊடகங்களுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது, 

யாழ் . மாவட்டத்தில் உள்ள இரண்டு சபைகளை தவிர ஏனைய 15 சபைகளுக்குமான வேட்பு மனுக்களை நாம் கையளித்திருந்தோம். அவற்றில் பல சபைகளில் எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனுவில் , 35 வயதுக்கு உட்பட்டவர்களின் பிறப்பு சான்றிதழ்களில் சில போட்டோ பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் , அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள் கையளிக்கப்படவில்லை எனும் காரணத்தால் அவை நிராகரிக்கப்பட்டதாக எமக்கு கூறப்பட்டுள்ளது. 

அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள்தான் கையளிக்கப்பட  வேண்டும் என கடந்த 15ஆம் திகதி ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தற்போது கூறுகின்றார்கள். 

ஆனால், அது தொடர்பில் எமக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை. இவை திட்டமிட்ட முறையில் எம்மை நிராகரிக்க செய்யப்பட்ட ஏற்பாடாகவே பார்க்கிறோம்.

வடக்கு, கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு  ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டை தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.

இது தொடர்பில் நாம் நீதிமன்றில் வழக்கு தொடர்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51