முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

21 Mar, 2025 | 09:38 AM
image

சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை  (19) மாலை கேப்பாபிலவு பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கேப்பாபிலவு பகுதியில் குடும்ப பிணக்கு காரணமாக ஏழு நாள் தடுப்புகாவலில் இருந்து விடுதலையாகி நேற்றுமுன்தினம்  வீடு வந்து மது அருந்திவிட்டு சட்டவிரோத துப்பாக்கியை வைத்து மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோத இடியன் துப்பாக்கியை வைத்திருந்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரை நேற்று வியாழக்கிழமை   (20)  முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு அதாவது 02.04.2025 வரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் கேப்பாபிலவு பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 174...

2025-04-21 10:37:57
news-image

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

2025-04-21 11:16:44
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கவேண்டும்...

2025-04-21 11:05:15
news-image

மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி.யில் ஆஜர் !

2025-04-21 10:52:39
news-image

ஹட்டனில் லொறி விபத்து - மூவர்...

2025-04-21 10:27:27
news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின்...

2025-04-21 10:57:30
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24