யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தி இருந்தனர்.
அவற்றில் 136 கட்சிகளும், 23 சுயேட்சை குழுக்களும் நியமன பத்திரத்தை தாக்கல் செய்தனர். அதில் 114 கட்சிகளினதும், 10 சுயேட்சை குழுக்களினதும், நியமன பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 22 கட்சிகளுடையதும், 13 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன.
யாழ் . மாநகர சபையில் தமிழ் மக்கள் கூட்டணி , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஈரோஸ் ஆகிய கட்சிகளினதும், ஞானப்பிரகாசம் சுலக்சன் , கௌசல்யா நரேந்திரன் ஆகியோரின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகர சபையில், இராமச்சந்திரன் சுரேன் மற்றும் யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோரது சுயேட்சை குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி நகர சபையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியினுடையதும், மகாலிங்கம் சதீஸ் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் சுயேட்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச சபை ஆகியவற்றில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் துரைராசா சுஜிந்தனின் சுயேட்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் சபரிமுத்து ஸ்டாலின் என்பவரது சுயேச்சை குழு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில், ஸ்ரீலங்கா கம்பினியுஸ் கட்சியின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிக்காமம் கிழக்கு பிரதேச சபையில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி தென்மேற்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் , தவம் தவநிலைதாசன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் ரெஜி ராஜேஸ்வரன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபையில் வைத்திலிங்கம் ஜெகதாஸ் மற்றும் குணரட்ணம் குகானந்தன் ஆகியோரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளினதும் , திலீப் ஜீவரஞ்சன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபைகளில் அனைத்து நியமன பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM