(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை இன ரீதியாக பார்ப்பது முற்றிலும் தவறானது. தீவிரமான பரிசீலனைக்கு அமைவாகவே சபாநாயகர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதற்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இந்த பாராளுமன்றத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், ஆர்.சம்பந்தன் ஆகிய சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் இருந்துள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் பதவி வகித்துள்ளார்கள். தேசிய ரீதியான பிரச்சினைகள் தோற்றம் பெறும் போது நடுநிலையாக இருந்தும் செயற்பட்டுள்ளார்கள். ஆகவே அவர்கள் மீது எமக்கு சிறந்த கௌரவம் உள்ளது.
பாராளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் சக பிரதிநிதிகளிடம் இணக்கமாகவே செயற்படுகிறோம். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகர் அண்மையில் விசேட அறிவிப்பை சபையில் விடுத்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் எமது சிரேஷ்ட சக உறுப்பினராக எஸ். சிறிதரன் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
எமது சக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது எமக்கு அதீத கௌரவம் உள்ளது. ஆகவே இந்த விடயத்தை இனரீதியாக பார்க்க வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். யார் தவறிழைத்தாலும் அதற்கான பிரதிபலனை பெற வேண்டும்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் சபாநாயகர் தீவிரமாக ஆராய்ந்து, அவரது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களுக்கு அமைவாகவே தீர்மானம் எடுத்துள்ளார்.இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM